Tuesday, October 18, 2005

 

28 ஆண்டுகளாகத் தொடரும் சூர்யா திரைப்பட விழா

திருவனந்தபுரத்திலிருந்து பா. வினோத், மா. கலாவதி படங்கள் வி.வி.ஆர். சுப்பிரமணியன்

ருபத்தி எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூர்யா திரைப்பட விழா இந்த வருடம் செப்டம்பர் 21ம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்கியது. கலாபவன் திரையரங்கில் இவ்விழாவை நடிகர் மோகன்லால் தொடங்கி வைத்தார். இவ்விழா திரைப்படம் மட்டுமின்றி பாட்டு, இசை, நடனம், நடிப்பு என 75 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில படங்கள் பற்றிய விமர்சனங்கள்... மனித மனம், மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட படம் சஞ்சாரம். விஜிபுல்லாப் பள்ளி இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம். சிறு வயது முதலே ஒன்றாக வளரும் தோழிகள். இவர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட உறவினை ஏற்றுக் கொள்ளாத சமூகம். இதனால் மனதளவில் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகுவதை பற்றிய திரைக்கதை. இயக்குநர் "குக்கூ' இயக்கத்தில் வெளியான "ஒராள்' மலையாள திரைப்படத்தில் நடிகர் முகேஷ் கதையில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். திரைக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக நினைத்து மனநோயாளியாக மாறும் திரைக்கதை. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும் சிறந்த முறையில் எடுக்கப்பட்டது. கண்ணே மடங்கு என்ற மலையாள திரைப்படம் உண்மை சம்பவம் மட்டுமின்றி இயக்குநர் ஆல்பர்டின் முதல் திரைப்படம். இத்திரைப்படம் 15 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நாயகி, குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. தந்தையின் மருத்துவ செலவிற்காகவும், தங்கையின் படிப்பிற்காகவும் வேலைக்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய திரைக்கதை. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிப்பதாக அமையும். கண்ணே மடங்குக என்ற கதைவரியிலும் இயக்குநர் ஆல்பர்டின் படைப்பு தன்னிறைவு பெறுகிறது. ஜெயராஜ் இயக்கத்தில் உருவான தைவ நாமத்தில் என்ற மலையாளத்திரைப்படம். இஸ்ஸாமிய தீவிரவாத இளைஞனின் கதை. மதம் தீவிரவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இஸ்லாம் என்பதற்கு சமாதானம் என்பது பொருள் என மிகவும் எளிமையான முறையில் உணர்த்தியுள்ளார். ஜெயராஜ் இயக்கத்தில் உருவான மற்றொரு படைப்பு "மகள்க்கு' மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த குழந்தை தாயோடு மனநிலை சிகிச்சை முகாமில் சேர்க்கப்படுகிறது. குழந்தையின் வரவால் மனநிலை இழந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் திரைக்கதை. லால்ஜி இயக்கத்தில் உருவான சிதறியவர் எனும் மலையாளத்திரைப்படம். பிற்படுத்தப்பட்ட இளைஞனைப்பற்றிய திரைக்கதை. வேலை தேடிச் செல்லும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை விரும்பாத அவன் இறுதியில் விருப்பமில்லாத தன் தந்தையின் தொழிலுக்கு செல்ல நேரிடுகிறது. இந்திரா காந்தி மறைவிற்கு பின் எழுந்த சீக்கியர்களின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். சோனாலி போஸ் சுழூ சசிகுமாரின் "காயாதரன்' பிகா குமாரின் காமோஸ் பானி போன்ற இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்கள் சீக்கியர் படுகொலை நிகழ்வை வெவ்வெறு கோணங்களில் தங்கள் கதைக்காக எடுத்துக் கொண்டாலும் எந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பை விளக்கும் படமாக அமைந்திருந்தது. வரலாற்றை மையமாக வைத்து போஸ், எலிசபெத் படங்கள் திரையிடப்பட்டன. சியாம் பெனகல் இயக்கிய போஸ் இந்தி படமான சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மறக்கப்பட்ட கதாநாயகனாக சித்தரிக்கிறார். பிரதீப் நாயர் இயக்கியுள்ள "ஓரிடம்' குடும்பச் சூழ்நிலையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண் அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறாள் என்பது தான் திரைக்கதை. 8 விருதுகள் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் வெற்றி பெற வில்லை. திரைக்கதையை தைரியமாக இயக்கிய பிரதீப் நாயர் பாராட்டப்படக்கூடிய இயக்குநர். சஞ்சய் லீலா பன்சாலியின் இந்தி திரைப்படமான பிளாக் கண் தெரியாத, காது கேட்காத, வாய் சரிவர பேச இயலாத குழந்தைக்கு பயிற்சி அளிக்கிறார். அமிதாப் அந்த குழந்தைக்காகவே வாழ்நாளை செலவழிக்கிறார். குழந்தை வளர்ந்து பட்டம் பெறும் சமயம் முதுமையால் பாதிக்கப்பட்டு தனது நினைவுகளை இழந்து தவிக்கிறார். நிறைவு நோக்கி படம் நகரும் போது அந்த குழந்தை அவருக்கு பயிற்சி உள்ளது. இது போன்ற குழந்தைகளுக்கு சொல்லித் தருகின்ற போது, வருகின்ற சிக்கல்கள் அவர்களது மனநிலை அவர்களுக்கு ஏற்படும் காதல். அவர்கள் இந்த உலகை விரல்களால் உணரும் உணர்வை சித்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பேஜ் 3 என்ற இந்திப்படம் பதுர் பந்தார்கா இயக்கியுள்ளார். மேல்தட்டு மக்களாக தங்களை கருதி கொள்ளும் பணக்கார வர்க்கத்தின் மறுமுகத்தை காட்டும் படமாக அமைந்துள்ளது. பத்திரிகை உலகின் நிலையும், பெண் பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் இயக்குநர் எடுத்துரைத்த விதம் சிறப்பாக உள்ளது. ஆண் பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணத்திரைப்படம். படம் தயாரித்த குழுவின் ஆய்வின் படி திருவனந்தபுரத்தில் 500க்கு மேற்பட்ட ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்கள். இப்படம் இவர்களது வாழ்க்கை முறையும், சோகங்களையும் எடுத்து இயம்பும் படமாக இருந்தது. இதன் இயக்குனர் சைனி ஜேக்கப் பெஞ்சமின். டெவில் ஒர்ஷிப்பர்ஸ் சாத்தானை வழிபடுபவர்களை பற்றிய ஆவணப்படம். திருவனந்தபுரத்தில் சாத்தானை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள் என்று இந்த ஆவணப்படம் கூறுகிறது. கே.பி. ஷிம்னா இயக்கிய "தி செல்ஸ்' விவாகரத்து தேவையா இல்லையா என்று விவாதம் செய்யும் படமாக உள்ளது. இளம் ஆவண பட இயக்குநர் என்றே கூறலாம். மும்பை இன்டர்நேஷனல் திரைப்படவிழாவில் இவர் இயக்கிய "சர்வைவர்' விருதுகளை பெற்றுள்ளது.

இவ்விழா குறித்து இயக்குனர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அளித்த செவ்வி: கேள்வி: இந்த வருடம் சூர்யா திரைப்பட விழா 75 நாட்கள் தொடர என்ன காரணம்? பதில்: ஆசியாவிலேயே சூர்யா திரைப்பட விழா முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மலையாளத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் 51. அதன் அடிப்படையில் ஆரம்பகால சூர்யா திரைப்பட விழா 51 நாட்கள் மட்டும் நடத்த வந்தோம். தற்போது கிழக்கு மேற்கு நாடுகளின் திரைப்படங்களும் இடம் பெறுவதால் 75 நாட்கள் தொடரலாம் எனத் தீர்மானித்தோம். கேள்வி: சூர்யாவின் முக்கியச் சாதனை எனக் கருதுவது? பதில்: சூர்யா ஆரம்பிக்கும் போது திருவனந்தபுரத்தில் 3 நாட்டிய கலைக்கூடம் மட்டுமே இருந்தது. தற்போது 100 நாட்டியக் கலைக்கூடம் உருவாகியுள்ளது. நாட்டியம் மட்டுமின்றி திரைப்படம், இசை ஆகியவற்றிலும் மக்களின் ரசிக்கும் திறன் மேன்மையடைந்துள்ளது. கேள்வி: இம்முறை சூர்யாவின் சிறப்பம்சம் என்ன? பதில்: சிறப்பம்சம் பற்றிக் கூறுமுன் இம்முறை ஒரு குறைபாடு ஏற்பட்டுள்ளது. தாகூர் திரையரங்கம் கிடைக்காததால் கலாபவன் திரையரங்கில் இவ்விழா நடைபெறுகிறது. இதனால் 1500 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி குறைந்து வெறும் 500 பேர் மட்டுமே காணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பம்சமாக குருபூஜை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு மும்பை எஸ்.கமல் என்பவருக்கு குருபூஜை நடத்தப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அவரின் மகளின் அறுவை சிகிச்சைக்கும், அவரின் திருமணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு குருபூஜை அனந்த லக்ஷ்மி வெங்கட்ராமன் என்பவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. கேள்வி: தற்போது சூர்யாவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? பதில்: சூர்யா துவங்கப்பட்டு 28 வருடம் ஆகிறது. மொத்தம் 16 நாடுகளில் சாப்டர்கள் (கிளைகள்) உள்ளது. மொத்த உறுப்பினர்கள் 30 ஆயிரம் பேர். கேரளத்தில் மட்டும் 7 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார் அவர்.

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?