Tuesday, October 18, 2005

 

""குஷ்புவின் கருத்தை வரவேற்கிறோம்..''

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஏனைய பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னணி வகித்துக் கொண்டிருக்கும் ஒன்றாக குஷ்புவின் இந்தியா டூடே கட்டுரை பேட்டி அமைந்து விட்டது. ""பெண்கள் திருமணமாகும் போது, கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலை பெற வேண்டும்''. குஷ்புவின் மேற்கூறிய கூற்று, அவருக்காக கோயில் கட்டிய ரசிகர்களையே அவரது கொடும்பாவியையும் எரிக்க வைத்து விட்டது. தமிழக கலாச்சாரத்தை இழிவு படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்காக குஷ்பு மன்னிப்பு கோரிய பின்பும் கூட அவர் மீதான கோபம் தமிழர்களுக்கு இன்னும் தனியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, தமிழகத்தை விட்ட வெளியேறச் சொல்வது, ஆர்ப்பாட்டம் செய்வது என போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த சமூகம் இன்று எவ்வாறு உள்ளது! உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. பண்டைய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டு வருகிறது. பெண்கள் சுயமாக சம்பாதிப்பது, திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வது, விவாகரத்து செய்வது போன்ற மேலை நாட்டு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குஷ்புவின் கருத்தை எதிர்ப்பதன் மூலம் சமூகத்தினது ஆணாதிக்க மனப்பான்மை மேலெழும்புகிறது. ஊடகம், அரசியல் போன்ற பல பிரிவினரால் குஷ்பு விவகாரம் பந்தாடப்பட்டாலும், பொது மக்கள் இது குறித்து என்ன கருத்து கூறுகிறார்கள் என ஆராய்ந்த போது கீழ்க்கண்ட விபரங்கள் பெறப்பட்டன.

அ.ராமசாமி: (பேராசிரியர் தமிழ்த்துறை)
குஷ்புவின் இக்கருத்தானது ஆர்ப்பாட்டத்திற்குரியது அல்லது. நவீன தமிழ்சமூகத்தின் மாற்றத்தை உள்வாங்கி அவரால் கூறப்பட்டுள்ளது. இது மிகச்சரியான கருத்து ஆகும். இன்றைய நகரத்து, படித்த பெண்கள் கட்டுப்பாட்டு தளத்திலிருந்து மாறி வருகின்றனர். குஷ்புவின் கூற்று இன்று அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் கருத்து மீதன்றி வேறு விஷயமாக போராடப்பட்டு வருகிறது. இதே கருத்தை ஒரு நடிகர் கூறியிருந்தால் இந்த அளவு பாதிப்பு இருக்காது. தமிழர்களுக்கு குஷ்புவின் உடல் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் அறிவு, கருத்து ஏற்க முடியவில்லை. கருத்து கூறியவர் ஊரை விட்டு போக வேண்டுமெனக் கூறுவது, தமிழர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு எனக்கூறுவது போல் உள்ளது. குஷ்புவின் மீது வெளிமாநிலத்தவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. குஷ்பு விவகாரத்தில் குறிப்பிட்ட சில சேனல்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இச்செய்தியின் பரபரப்பு அடங்காமல் தொடரச் செய்கின்றது. சில அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வை துõண்டி தங்கள் அரசியல் எல்லையை விரிவு படுத்தப்பார்க்கின்றன என்றார்.

மேலும் குஷ்பு கூறிய கருத்தினை பற்றி கல்லுõரி மாணவர்களிடையே கேட்ட போது:

பென்சிகர் (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை மாணவர்)

வாழ்க்கை என்பது ஒரு தடவைதான். அதை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருந்தாலும் பரவாயில்லை. பெண்களுக்கு தங்கள் வீட்டிலோ அல்லது திருமணம் ஆன பின் கணவன் வீட்டிலோ வேலி என்று ஒன்று போட்டு அவர்களை கட்டுப்படுத்த முடியாது. தனி மனித சுதந்திரம் என்பது பெரிதும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே திருமணத்திற்கு முன்பான அவர்களின் வாழ்க்கை எனது கவனத்திற்கு தேவையற்ற ஒன்றாகும் என்றார். வினோத்: (2ம் ஆண்டு தொடர்பியல் துறை) பெண்கள் தங்கள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலான வாழ்வு எவ்வாறு அமைந்தது என ஆராய்வது தேவையற்ற ஒன்று. திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பொறுத்தது. திருமணமான பின்பு அமையும் அமைதியான வாழ்க்கையே எனக்கு தேவை என்றார்.

வி.வி.ஆர்.சுப்பிரமணியன்: (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை)

திருமணத்திற்கு முன்பு எனது பார்வையில் குடும்பப்பாங்கான, கட்டுபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பூ வைத்தல், சேலை அணிதல் போன்றவையே அவர்களின் அடையாளச் சின்னமாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களான ஜீன்ஸ், டிசர்ட்ஸ் ஆடை கலாச்சாரம் போன்றவற்றை என்னால் ஏற்க முடியாது. குஷ்புவின் கருத்து என்னைப் பொறுத்தவரை மறுப்பிற்குரிய ஒன்று. அருண்குமார்: (தொடர்பியல் துறை விரிவுரையாளர்) குஷ்பு விவகாரத்தில் பேச்சுரிமை என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பிரபலமான ஒருவர் கருத்து கூறும் போது அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய ஒன்று. நாம் எந்த நிலையில் இந்த கருத்தை கூறுகிறோம் என்பதை அந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டை புரிந்து கொண்டு தமது கருத்தை வெளியிட வேண்டும். நாம் கூறும் சொந்த கருத்து மக்களிடையே எந்நிலையில் போய் சேரும் என்பதை அறிந்தே வெளிப்படையாக தமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் இவ்விவகாரத்தின் மூலம் அடிப்படை உரிமையான ஒருவரின் கருத்துரிமை பாதிக்கப்படுவதை அறிய முடிகிறது. மாற்றங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தயங்கும் மக்களின் மன உணர்வினை பிரதிபலிக்கும் ஒன்றாகவே உள்ளது.

அ.தேன்மொழி, ரா. பத்மலதா. படங்கள் மா. மாரியப்பன், பா. சேதுராமன், வி.வி. ஆர். சுப்பிரமணியன். ­­­­­­­­­­­­­­­­­­­

Comments:
First of all the title is misleading as not all respondents agree with her views. I see no
reason in choosing such a title.
Second getting views of one faculty member and some students does not amount to getting views of public or pothumakkal. i dont know what is the objective of this exercise or the post. you could have sought views of more persons from different segments of the society to gauge their views and
responses to the controversy
or could have used a questionnaire for a survey.you could have done an analysis based on the feedback
received. you have not done anything like that.

one need not be a student of
journalism to do what you have
done.if this is what students
of journalism are capable of doing then something is wrong somewhere.
 
தனி மனிதர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அது அவர்களுடைய விருப்பம். உரிமை. ஆனால், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்... அதற்கு வழி இது என்று பொதுவில் அறிவுரை கூறுவது... சரியா?... சொல்லுங்கள்...

நாகரத்தினம் சுவாமிநாதன், மதுரை
 
Frankly speaking, read the friggin' article before posting anything. I doubt many have read the original India Today article. Now coming to general advice, it's a general situation. Who can deny that youth in India today don't have pre-marital and unsafe sex? Are they going to stop? How long have we been told to have no more than 2 children, because our population is also our weaknewss? Did most listen? Frankly, no. So what is wrong with telling them to take precautions. There are enough girls that commit suicide and families that are ruined. India is second in the world for Aid infested people. Yet, our people act like we have a perfect society. How many parents know what their children do once they step out of the house? Let's not talk rubbish, and try to find practical solutions. Our general public, well, they try to keep their house clean by throwing their garbage in their next door neighbours property. Change their attitude first.
 
குஷ்பு கூறியதை ஆதரித்த மாணவர்களே..குஷ்பு கூறிய அந்த படித்த இளைஞர்களாக நீங்கள் மாறப்போகின்றீர்களா..?

எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்தால் கலாச்சாரம் உறவுகள் எல்லாம் தெவையில்லை..யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றாகிவிடும்..இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறுப்புகளுக்குள் வாழ்வதால்தான் மனித இனம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது..

மாணவர்களிடமிருந்து இந்தக்கருத்து வருவது..கலாச்சாரப்போக்கை எண்ணி வருந்துவதற்குண்டான சூழ்நிலையை உருவாக்குகிறது.

இதயம் நெகிழ்வுடன்

- ரசிகவ் ஞானியார் -
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?