Tuesday, October 18, 2005

 

நகரங்களோடு கைகோர்க்கும் கிராமங்கள்

கட்டுரை: அ.இசைச்செல்வப்பெருமாள் அ.தேன்மொழி படங்கள்: பா.சேதுராமன்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசு கிராம வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் நகரங்களிலிருந்து துண்டுபட்ட கிராமங்களை இணைக்க மத்திய அரசால் "" பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்'' கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதி திட்டம் நெல்லை மாவட்டத்தின் திருப்பணி கரிசல் குளம் என்ற கிராமத்தை பிரதான சாலைகளுடன் இணைத்து வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் மத்திய அரசின் கிராம சாலை திட்டம் துவங்கப்பட்டது. 2000 2007 வரையிலான 7 ஆண்டுகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் நகரங்களோடு இணைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். கிராமங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை, சந்தை போன்றவற்றிக்காக நகரங்களைச் சார்ந்திருக்கின்றன. விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மூலிகைகள் மற்றும் உணவு தானியங்களை விற்க நகரச் சந்தைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமங்கள் உள்ளன. கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் "" பிரமத மந்திரி கிராம சாலை திட்டத்தை'' மத்திய அரசின் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முழுவதுமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையினால் கடந்த 20032004ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 20042005யிலிருந்து இத்திட்டம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது, அத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் நான்கு பகுதிகளைக் கடந்து 5வது பகுதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியில் திருநெல்வேலியில் ( 20002001 ) நாற்பத்தி ஒரு சாலைகள் 71.893 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 590.590 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதியில் ( 2001 2002 ) இருபது சாலைகள் 38.480 கிலோ மீட்டர் தொலைவில் ரூ. 387.685 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதி சாலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு, சில புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதன் பின் மக்கள் தொகை 500க்கு மேற்பட்ட கிராமங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மூன்றாவது பகுதியில் ( 2003 2004 ) 68 சாலைகள் 130.855 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 1456.290 கோடிகள் செலவில் போடப்பட்டன. இவை அனைத்தும் திருநெல்வேலியின் குக்கிராமங்களின் 238 வாழிடங்களை இணைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் போடப்பட்ட கிராம சாலைகளின் தரத்தை நிர்ணயம் செய்ய மூன்றடுக்கு மேற்பார்வை குழுக்கள் இயங்கி வருகின்றன. ( முதல் குழு ) ஊரக வளர்ச்சி முகமையின் தலைமைப் பொறியாளர், துணைப் பொறியாளர், சிறப்புப் பொறியாளர் ஆகியோர் கொண்ட குழு முதலில் பார்வையிடுகிறது. அதன் பின் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் குழு சாலையின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சாலைப்பணி முழுவதுமாக முடிவுற்ற பின் தேசிய அளவிலான பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் குழு டெல்லி தேசிய ஊரக சாலை மேம்பாட்டு அமைப்பால் அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய குழுவினால் ""திருப்தி'' என சான்று அளிக்கப்பட்ட பின் முழுவதுமாக நிறைவு பெற்ற சாலை ஆகிறது. இதுவே தார்ச்சாலைகளின் உயர்வான தரத்திற்கு காரணம் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் துணை முதன்மை பொறியாளர் செல்வராஜ் கூறுகிறார். நெல்லையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட திருப்பணி கரிசல் குளம் விவசாயத்தை நம்பி வாழும் கிராமம். 2004 2005ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி பிரதான சாலையில் கொண்டநகரத்துடனும் தென்காசி பிரதான சாலையில் அபிஷேகப்பட்டியுடனும், இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாலையின் பயன்பாடு குறித்து இக்கிராமத்தை சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் சுப்பிரமணியனிடம் கேட்டேன்: "" இந்த சாலை எங்கள் ஊர் குளக்கரைக்கு அருகில் வயல்களின் ஓரத்தில் போடப்பட்டுள்ளது. குளத்துபாசனத்தினால் சாலையை அடுத்துள்ள 600 ஏக்கர் நிலங்கள் விளைக்கின்றன. இதில் கார் பருவத்தில் நெற்பயிரும், கோடை பருவத்தில் பருத்தி, வெண்டை, முருங்கை, சோளம் போன்றவற்றை விளைவிக்கிறோம். விளைந்த பொருட்களை ஒற்றையடிப் பாதை வழியாகத் தான் தலைச் சுமையாக கொண்டு வந்தோம். மழை காலத்தில் குளத்து தண்ணீரின் கசிவினால் சக்தி ஏற்பட்டு வயலுக்கு செல்ல வழியின்றி கஷ்டப்பட்டு கொண்டிந்தோம். முட்களும், புதர்களும் நிறைந்து கிடந்த ஒற்றையடி பாதையில் இரவு நேரம் பாம்புகளுக்கு பயந்து நீர் பாய்ச்ச செல்ல பயந்து கொண்டிருந்தோம். போக வர வசதியில்லாததால் என் மனைவி வயலை விற்கச் சொல்லி விட்டாள். இந்த சாலை வந்த பின் பறித்த காய்கறிகளையும், அறுவடை செய்த நெல் மூட்டைகளையும் வயல் அருகிலேயே பைக், ஆட்டோ மற்றும் வேன்களை நிறுத்தி சந்தைக்கு ஏற்றி செல்கிறோம். பறித்தவுடன் சீக்கிரமாக சந்தைக்கு கொண்டு செல்வதால் காய்கறிகள் வாடாமல் இருக்கின்றன. இந்தச் சாலையில் நகரப்பேரூந்து வசதியிருந்தால் பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வது எளிதாக இருக்கும் ''.

Comments:
//Lab journal of the department of Communication, Manonmaniam Sundaranar University, Tirunelveli 627 012 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறையின் மாணவர் பயிற்சி இதழ்//

வாங்க வாங்க!

நல்லதொரு தொடக்கமாக உங்களின் வலைப்பதிவு இருக்குமென்று நம்புகிறேன்.

-சந்திரமதி கந்தசாமி
 
வாசகர்களை

//Select UTF-8 from View->Encoding.//

என்று தேர்ந்தெடுக்கச் சொல்வதைவிட நாமே செய்துவிட்டால் நல்லது.

கீழே இருப்பதை உங்களின் டெம்ப்ளேட்டில் சேர்த்து விடுங்கள்.

[less than]
META http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8"[greater than]

insert after head and title.

or take a look at my old blogspot blog

http://mathykandasamy.blogspot.com

Welcome to TamilBlogs.

-Mathy
 
நல்ல பாதைகள் என்ற கனவு நடைமுறைப் படுத்தப் படவேண்டியது இந்தியாவின் வளர்ச்சிக்கும், நகரங்களின் நெரிசல் குறைப்புக்கும்,கிராமங்களின் வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்று.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?