Tuesday, October 25, 2005

 

பரபரப்பு இதழியல் வெல்க என்று கொட்டு முரசே

கவர்ச்சியும் கிளுகிளுப்பும் மிக்க கடைசிப் பக்கங்களும் பரபரப்பான முதல் பக்கங்களும்
தென்னிந்தியாவில் ஊடகங்களை நடத்தி வரும் சன் குழுமம். அச்சு ஊடகத்தின் முதல் தினசரி வெளியீடாக தமிழ் முரசு மாலை நாளிதழை Tabloid வடிவில் வெளியிட்டுள்ளது. வாசகர்களை கவர்வதற்காக வண்ணமயத்துடன் 20 பக்கங்களுடன் முதல் நாள் 20,000 பிரதிகளும் பின் வரும் நாட்களில் 50,000 பிரதிகளும் விற்பனையாவதாக தெரிகிறது. பத்திரிகையை வாங்குபவர்களுக்கு இலவசப் பரிசுகளையும் வழங்கி வந்துள்ளது.தமிழ் முரசு மாலை நாளிதழ் வருகை அனைத்து தரப்பு மக்கள் மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களிடையே எதிர்பார்ப்பு காணப்பட்டது. செய்திகள் குறைவாக காணப்படுகிறது. நகரச் செய்தி தகவல்கள் குறைவாக உள்ளன. குற்றம் தொடர்பான செய்தி தகவல்கள் நெகிழ்வுரையாக வெளிவருகின்றன. சினிமா தொடர்புடைய செய்திகளும் அதற்கான புகைப்படங்களும் அதிக அளவில் உள்ளது.

ஓர் மாலை நாளிதழ் 20 பக்கத்துடன் வெளிவருவது புதிதாக இருந்தாலும் செய்திக்கு முக்கியத்துவம் தரப்படாமல் உள்ளது. நடிகை புகைப்படத்தை தவிர்த்து செய்திக்குரிய புகைப்படம் முதலியவற்றை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.இதுவரை நாளிதழுடன் இலவச மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். செய்தியின் தலைப்பு பெரியதாகவும் அதன் வடிவமைப்பு நன்றாகவும் உள்ளது. செய்தியின் தரம் கேள்வி குறியாக உள்ளது. பக்கங்கள் வண்ணமயமாக காணப்படுகிறது.ஓர் செய்திதாளின் விற்பனை அதிகரிக்க இலவச பரிசுகள் வழங்கினால் மட்டும் போதாது செய்தி அதிகமானதாக இருக்க வேண்டும் என நெல்லை ம.சு.பல்கலைக் கழக தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்த ராஜு கூறினார். தமிழ் முரசு நாளிதழ் பற்றி தொடர்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரனிடம் கேட்ட போது. மேற்கத்திய நாடுகளில் வெளிவரும் செய்திதாள்களில் வேறுபட்ட பத்திரிகைகளுள் Tabloid வகையும் ஒன்றாகும்.இவ்வகை பத்திரிகை செய்தித் தாளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. Spreadsheet நாளேடுகள் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை. விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதில்லை. அதனை தவிர்த்து மக்கள் தொடர்புடைய செய்தி தகவலுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.Tabloid பத்திரிகைகள் தனி நபரின் வாழ்வு பொது வாழ்க்கையில் தொடர்புடையவர், அரச குடும்ப வாரிசுகள், கலைத்துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தொடர்புடைய பிரபலங்களின் செயல்பாடு பற்றி அறிய ஓர் குறிப்பிட்ட வாசகர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரபலங்கள் பற்றிய தகவலை சேகரித்து எடுத்துச் செல்வதே Tabloid ஆகும். இயல்பாகவே மனித மனமானது பிறர் பற்றிய ரகசியத் தகவல்களை அறிய ஆர்வம் காட்டுகிறது.அவற்றை பூர்த்தி செய்வதற்கு வடிகாலாக பிரபலங்களின் தனிப்பட்ட தகவலை அறிய முடிகிறது. மனிதனின் இத்தகைய எண்ணமே Tabloid பெருகக் காரணம். இவற்றில் வெளிவரும் தகவல்கள் பரபரப்புடன் கூடியதாவும், பிரபலங்கள் சமூக வாழ்க்கையுடன் கொண்டிருக்கும் தொடர்பில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்.இந்தியாவில் Tabloid முதலில் மும்பையில் BLITZ என்னும் பெயரிலும் MID DAY என்ற டில்லியில் பெயரிலும் வெளிவருகிறது. தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தமிழ் முரசு இதழானது அதன் வடிவம் மட்டுமே Tabloid முறையில் வெளிவந்துள்ளது. அதன் உள்ளடக்கம் செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் முதலியவை பல்வேறு இதழ்கள் வெளியிடும் கருத்து தகவலின் ஓர் தொகுப்பாக மட்டுமே இந்த இதழ் உள்ளது என்றார்.விற்பனை பிரதிகள் அதிகமாக விற்பனை ஆவதைப் பொறுத்து ஓர் நாளிதழின் வளர்ச்சியை குறிப்பிட முடியாது. எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ள தமிழ் முரசு நாளிதழ் எப்படி தொடர்ந்து ஒலிக்கப்போகிறது என்பதைக் கண்காணிக்க தமிழகம் காத்திருக்கிறது என்பதே நிஜம்.

கட்டுரை: எம்.மாரியப்பன்
படங்கள்: வி.வி.ஆர்.சுப்பிரமணியன்.

Comments:
இந்தியாவைப் பொறுத்தவரை
மாலை நாளிதழ்கள் அன்றைய செய்திகள் அடிப்படையில்தான் விற்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் வெளியாகும் டேப்லாய்ட் மட்டுமல்ல அந்த டேப்லாய்டுகளுடன் போட்டியிடும் செய்தித்தாள்களும் தனிநபர் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளன. அதற்கு காரணம் பிரிட்டனில் உள்ள பிரபலங்கள் உலகப் புகழ்பெற்றவர்கள். ஒரு செய்தியை பத்திரிகை வெளியிட்டால் பூமிக்கோளத்தில் மறு பகுதியில் கூட அது பிளாஷ் ஆகும்.
பிறகு உங்களது கட்டுரையில் ஒரு திருத்தம் டில்லியில் வெளியாகும் டேப்லாய்ட் டுடே. மிட்டே மும்பையில் பெரிய பத்திரிகைகளுக்கே சவாலாக உருவெடுத்துள்ளது.

-வலைப்பூவினன்

(பொதுவாக வலைப்பூவில் உங்கள் கட்டுரைக்கு எழுதப்படும் கமென்ட்டுகளுக்கு பதில் கமென்ட்டுகளை கீழே குறிப்பிட்டால் அது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதைத்தான் வலைப்பூவினர் பலர் கடைபிடிக்கின்றனர்.)
 
"செய்தியின் தரம் கேள்வி குறியாக உள்ளது" - சரியாக சொன்னார்
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?