Monday, October 23, 2006
File - Trosow_Dissertation.pdf
The following file was arranged to be sent to you automatically.
File : Trosow_Dissertation.pdf
Description :
Size : 1163 KB
However, due to the large size of the file, it is not sent
through email. Instead, you can access the file at this URL:
http://groups.yahoo.com/group/msumphil2006/files/Trosow_Dissertation.pdf
Regards,
Moderator, msumphil2006
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
Yahoo! Groups: Welcome to msumphil2006. Visit today!
Welcome to the msumphil2006 group at Yahoo! Groups.
You're set to connect with your group, so drop by soon.
But sure to check out all the simple (and free) ways to
communicate, share, and discover:
* You choose when and how to stay in touch
* Swap photos, files, polls, calendars, links, and more with members
* Quickly scan new postings and browse detailed message archives
* Plus enjoy many more ways to show and tell - 24/7
So get started. Visit msumphil2006 now.
http://us.rd.yahoo.com/evt=42879/*http://groups.yahoo.com/group/msumphil2006
Regards,
Moderator
msumphil2006
Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
Tuesday, April 11, 2006
இளம் பெண்களை கொத்தடிமைகளாக்கும் ஆலைகள்
வளர் இளம் பெண்களை கொத்தடிமைகளாக்கும் ஆலைகள்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தாலுகாவை சேர்ந்தது "மூலச்சி' கிராமம். இயற்கை அழகு செழித்துக் காணப்படும் இந்தக் கிராமம், பொதிகை மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த மூலச்சி கிராமமும் அதனைச் சுற்றியுள்ள 9 கிராமங்களும் சேர்ந்தது தனி ஊராட்சி ஒன்றியமாகும்.
இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் விசாயமும், பீடி சுற்றுதலும் மூலச்சி கிராம மக்களில் பெரும்பாலானோர் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். பட்டபடிப்பு வரைப் படித்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
மூலச்சி பஞ்சாயத்தின் கீழ் ஒரு அரசு துவக்கப்பள்ளியும், ஆதி திராவிடர் விடுதியும் உள்ளன. மேற்படிப்புக்கு அருகில் உள்ள கல்லிடைகுறிச்சி அல்லது பொட்டலுக்கு சென்று அங்குள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். மூலச்சி கிராமவாசிகள் முழுக்க தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள்.
தினக் கூலியை மட்டுமே நம்பிப் பிழைக்கும் மூலச்சி கிராம மக்களின் வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி வீரவநல்லுõர் அருகே ஒரு கிராமத்தைச் சார்ந்த சுப்பையா பிள்ளை என்பவர் ""படித்தால் எங்கே வேலைக் கிடைக்கிறது? கோபி டெக்ஸ்டைல்ஸ் என்ற மில்லில் நாளொன்றுக்கு ஒரு ரூபாயும், 5 வருடம் கழித்தால் 50 ஆயிரம் ரூபாயும், தருகிறார்கள் '' என மூலச்சி கிராம மக்களிடம் ஆசையைத் துõண்டினார். தினக்கூலிக்கு வேலை பார்த்த இம் மக்களுக்கு தொடர்ச்சியான பணியும் 3 வருடத்தில் 30 ஆயிரம் ரூபாயும் தருகிறார்கள் என்பதனால், தனது வீட்டு 14 17 வயது பெண்களை சுப்பையா பிள்ளையோடு அனுப்பி வைத்தனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் என்பதாலும் வரும் வருவாயை அப்படியே சேமித்துப் பெண்களின் திருமண செலவுக்கு வைத்துக் கொள்ள எண்ணினர், பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்களில் ஒருவரும், முந்தைய ஊர் நாட்டாமையுமாகிய பெ.சண்முகம் கூறுகையில், "" தமது பிள்ளைகள் தங்கியிருந்த இடம் சுகாதார சீர்கேடாகவும், நெறிசல் நிறைந்த இடமாகவும் இருக்கிறது. முதலில் 8 மணி நேரம் வேலை வாங்கிய மில், பின்னதாக 12 மணிநேரமாக வேலையை உயர்த்தியதால் பெண்கள் வேலை செய்வதில் சோர்வுற்றனர்'' எனக் கூறினார்.
சண்முகத்தின் மகள் வேலுமயில், ""12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து வந்த எங்களை, அங்குள்ள சுப்பிரவைஸ்சர்கள் ஏதேனும் பிழை செய்தால் " நாயே, பன்னி' என்று தம்மைத் திட்டினர். இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டோம்'', என்று கூறினார்.
தவிர, சுமார் 500 மாணவிகள் தங்கும் விடுதியில் 3 கழிப்பறை மட்டுமே இருந்ததால் "கக்கூஸ் பத்து' போன்ற நோய் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மில்லில் பணி செய்த மு. சந்தனமாரி, கூறுகையில் "" முதல் மாதம் 150 ரூபாய் மட்டுமே ஊதியம் தந்தனர். பின்னர் 350 ரூபாய் வரை தமது மாத ஊதியத்தை உயர்த்தினர். நாளொன்றுக்கு 30 ரூபாய் என்ற ஊதியக் கணக்கில், உணவு மற்றும் மருத்துவ செலவுக்கு பணத்தை பிடித்துக் கொண்டார்கள். மேலும் 8 மணிநேரம் உழைக்கும் நேரத்தை, 12 மணிநேரமாக உயர்த்தும் போது, எந்த ஊதிய உயர்வும் தரவில்லை. நோய்வாய்பட்ட பெண்கள் விடுப்பு கேட்டால், ஒரு ஷிஃப்டாவது பார்' என்று கட்டாயப் படுத்துவார்கள்'' என்று கூறினார்.
சந்தனமாரியின் தகப்பனார் சு. முருகப்பெருமாள், "" வாரம் ஒரு முறை எங்கள் மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வோம். அவள் கவலையுடன் பேசுவதை உணர்ந்து, மகளைப் பார்க்க கோபி டெக்ஸ்டைல்ஸ் சென்றேன்.
அங்கு அவள் படும் கஷ்டத்தை அறிந்து வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தேன். எனவே, நிறுவனத்தின் அதிகாரியைச் சந்திக்க முற்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. ஆட்களைக் கொண்டு தாக்கவும் செய்தனர். இதன் விளைவாக அருகில் உள்ள காவல் துறையில் புகார் செய்தேன். பின்னரே எங்கள் மகளை காவல்துறை மீட்டு தந்தது '' எனக் கூறினார்.
சு. முருகபெருமாள் நடந்ததை ஊர் மக்களிடம் வந்து கூறவே, மீதமுள்ள பெண்களின் பெற்றோர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் கலெக்டரிடம் புகார் கூறியதன் பேரில் , கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 14 பெண்களும் டிசம்பர்27,2005ல் மீட்கப்பட்டனர். அவர்கள் முறையே பெ. சண்முகம் மகள் வேலுமயில், ச. ஆதிமூலம் மகள் பொற்செல்வி, செ. மகாலிங்கம் மகள் பார்வதி, து. முருகாண்டி மகள் விஜயராணி, பெ.மாடமுத்து மகள் இந்தரா, பெ. கிருஷ்ணன் மகள் கலா, மா. மாடசாமி மகள் முருகம்மாள், சு. மூக்காண்டி மகள் பால்கனி, ச. மாடசாமி மகள் ரேவதி(பார்வதி), வ. சுடலை மகள் மகேஷ்வரி, சு. முருகப்பெருமாள் மகள் சந்தனமாரி, செல்லத்துரை மகள் அஸ்வினி, சுப்பிரமணி மகள் ஆனந்த செல்வி மற்றும் பூவையா மகள் சித்ரா ஆகியோர் ஆவர்.
மீட்கப்பட்ட 14 பெண்களும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட பெண்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. வறுமையின் காரணமாக மீட்கப்பட்ட 14 பெண்களில் 9 பேர் திருப்பூரில் உள்ள மில்களுக்கு வேலைக்கு மீண்டும் சென்று விட்டதாக, பெ. சண்முகம் கூறினார்.
கல்வி, பொருளாதாரம் போன்ற தேவைகள் பூர்த்தியாகாதவரை இந்த அவலத்தை நீக்குவது கடினம் என ஊராட்சி தலைவர் ராமையா கூறுகிறார்.
மூலச்சி கிராம மக்களின் இந்த அவலநிலை குறித்துக் "களம்' என்ற தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் பரதனிடம் விவாதித்தேன்
"" திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் 84% பேர். சொந்த விளைநிலம் அற்றவர்கள். இதற்குக் காரணம் நிலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களிடம் குவிந்து காணப்படுவதே ஆகும். திருநெல்வேலி மற்றும் அதன் அண்டைய மாவட்டங்களில் மட்டும் 13 ஜமீன்களிடம் நிலம் குவிந்து கிடக்கிறது.
கடம்பூர் ஜமீன், சிங்கம்பட்டி ஜமீன், உரயத்துõர் ஜமீன், ஊத்துமலை ஜமீன், குறுக்கல்பட்டி ஜமீன், தலவன் கோட்டை ஜமீன், நெல் கட்டும் சேவல் ஜமீன், சிவகிரி ஜமீன், உக்கிரங்கோட்டை ஜமீன் ஆகியவை ஒரு சாதியை சார்ந்தவர்களின் ஜமீன்களாகும். இவை தவிர எட்டையபுரம் ஜமீன், இளையஅரசவேந்தர் ஜமீன், தளவாய் முதலியார் ஜமீன் பிற சாதியைச் சார்ந்தவர்கள் ஆவர். இதில் தளவாய் ஜமீனுக்கு சொந்தமான நிலங்கள் பெரும்பாலும் தாமிரபரணி நதி ஓரத்தில் காணப்படும் நிலங்களாகும். ஜமீன்களிடம் மட்டுமல்லாது நெல்லையப்பர், வரதராச பெருமாள், தருமை ஆதினம், திருவாடுதுறை, ஈசானமடம், நாங்குநேரி ஐயர் மடம் போன்ற கோவில்களுக்குச் சொந்தமாகவும் பெரும்பாலான நிலங்கள் காணப்படுகிறது.
இந்நிலையில், நிலமற்ற ஏழை மக்கள் உள் குத்தகையாக நிலங்களைப் பெறுகின்றனர். விவசாயம் செழிக்காத காலங்களில் கடனாளியாக மாறி, தினக்கூலியாக மாறிவிடுகின்றனர். 25% பேர் வரை கிராமத்திலிருந்து "தொழில் தேடி' இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந்த இடம் பெயர்வு பருவ இடம் பெயர்வு மற்றும் நிரந்தர இடம் பெயர்வு என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. பம்பாய், சென்னை போன்ற இடங்களுக்கு "தொழில் தேடி' செல்லுதல் நிரந்தர இடம் பெயர்வு ஆகும். அருகில் உள்ள ஊர்களிளோ, நகரங்களிலோ செங்கல்சூளை போன்றவற்றில் பணி செய்த மீண்டும் தமது கிராமத்துக்கே திரும்புதல் பருவ இடம் பெயர்வு ஆகும்.
இதன் தொடர்ச்சியாக உலகமயமாக்கலின் காரணமாக 2000ம் ஆண்டிலிருந்து 12 முதல் 18 வயதிலான வளர் இளம் பெண்கள், நுõற்பாலைகள் போன்றவற்றில் "மாங்கல்ய திட்டம்' என்ற பெயரில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாரே மூலச்சி கிராமப் பெண்களும் ஆசை வார்த்தை கூறி, உழைப்பைச் சுரண்டும் நோக்கில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டனர். அந்த 14 பெண்களை மீட்டு வந்து, கிராமத்தில் பெற்றோரிடம் சேர்த்த மாட்ட நிர்வாகம் இதுவரை நிவாரணத் தொகையோ, மறு வாழ்வுக்கான உதவியோ அப்பெண்களுக்கு கிடைக்கச் செய்யவில்லை யெனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மீட்கப்படும் பெண்களுக்கு வேறு வழி காட்டாததால், அப் பெண்கள் வேறு வேலைக்கு மீண்டும் வெகுதுõரம் செல்கின்றனர். மீண்டும் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க ஏழை எளிய மக்களுக்கு சொந்தமாக நிலம் வழங்குவதே சரியான முடிவாக இருக்கும் என கூறினார்.
மர நிழலில் ஊஞ்சல் ஆடி மாணவர்கள் கதை பேச வேண்டும்: வசந்தி தேவி
முதல்ல இங்கிலீஷ் மீடியமே இருக்ககூடாது. ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது இரண்டாம் மொழியாக இருக்க வேண்டும். பாடங்களை கற்றுக் கொடுப்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். தரம் றைந்த ஆசிரியர்கள் பணிபுரிவதால் குழந்தைகளின் கேள்வி கேட்கின்ற உரிமை, குணம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற மகளிர்தினத்தில் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான வசந்திதேவி கலந்து கொண்டார். அவர் தாமிரபரணிக்கு பேட்டியளித்தார்.
* பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள தாங்கள் கல்விக்கான உரிமை பற்றி கூறுங்கள்.
பதினெட்டு வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வி தரப்பட வேண்டும். இளம் குற்றவாளிகள் சட்டத்திலும் மற்ற அரசு சட்டங்களிலும் 6முதல் 18வயது வரையுள்ள அனைவரும் குழந்தைகள் எனக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைக்கான உரிமையை 18வயது வரை நீட்டிக்கவேண்டும் என்பது எங்களது கல்வி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோள்.
* பல்கலைகழகம் மற்றும் கல்லுõரி பெண்களிடம் அவர்களுக்கான உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றதா?
அவர்களுக்கும் இல்லை, மறறவர்களுக்கும் இல்லை. பேப்பரில் படித்த அளவு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். அதுவும் கூட சொல்லிக் கொடுத்தால் தான் தெரிய வாய்ப்புள்ளது.உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற வேளைகளில், அவற்றை ஒன்று சேர்த்து, போராடிப் பெறுகின்ற விழிப்புணர்வும், தைரியமும் முழுமையாக வந்து விடுவதில்லை.
* கிராமப்புற பெண்களுக்கு கல்வி கிடைக்கின்றதா? கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இல்லை, அது கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் எல்லோருமே பள்ளிக்கு வருவதில்லை. பள்ளியில் 12 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 15% பேர் தான் வெற்றி பெருகிறார்கள். மற்றவர்களெல்லாம் பல்வேறு நிலைகளில் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். கல்லுõரிக்கு வருவது 7% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் பாதிக்கப்படுவது தலித் மக்களும், பழங்குடியினரும், ஏழை மக்களும் தான். உயர்கல்வியிலும், வேலையிலும், ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீடு இருக்கின்றது. இதற்கு தகுதியானவர்களே மிக கொஞ்சம் பேர்தான். ஏனெனில் இவர்களை கல்வி நிலையத்திலேயே வடிகட்டி விடுகிறோம். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுவது முன்பு இருந்ததை விட இப்போது ரொம்ப மோசமாகி விட்டது.
நாங்கள் படிக்கின்ற காலங்களில் தமிழ் வழிகல்வி மட்டும் தான் இருந்தது. இங்கிலீஸ் மீடியம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. எல்லோரும் ஒரே தரத்தில் அரசுப் பள்ளிகளிலே தான் படித்தோம். அது நானாக இருந்தாலும் சரி, அப்துல் கலாமாக இருந்தாலும் சரி தமிழிலே, தாய் மொழியிலே படித்து நல்ல நிலைக்கு முன்னேற முடிந்தது. இன்றைக்கு இங்கிலீஸ் மீடியம் இல்லைன்னா அது கல்வியே இல்லைன்னு ஆகிப்போச்சு 8வது வரையுள்ள பஞ்சாயத்து அரசுப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் 40% ஆதிதிராவிடமாணவர்கள் தான் இருக்கிறார்கள். அதிலும் ஏழை மாணவர்கள் பள்ளியை விட்டு இடையில் நின்று விடுகிறார்கள். இதனை மாற்றிப் பொதுக்கல்வித்திட்டம் கொண்டுவர வேண்டும் அதை வட்டாரப்பள்ளி என்று சொல்வார்கள். அதாவது, அதிக கட்டணம் வாங்க கூடிய பள்ளியாக இருந்தால் கூட, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்களைக் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உலகம் அனைத்தும் பின்பற்றுகின்ற நடைமுறைதான். புதிதல்ல
* பெண்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க நீங்கள் முன் வைக்கும் பரிந்துரைகள் என்ன?
தற்போது நடைமுறையில் இருக்கின்ற சர்வ ஹிக்ஸா அபியான் என்று அழைக்கப்படும் கல்வி திட்டம் மூலம் ஒரளவு தன்னிறைவு அடைந்திருக்கிறோம் என்கிறார்கள். அது எந்த அளவிற்கு உள்ளதென்று தெரியவில்லை. பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் 8ம் வகுப்புக்குப் பிறகு கல்வியை விட்டு விலகும் நிலை காணப்படுகிறது. இதனைத் தடுக்க தரமான கல்வி கொடுக்கப்படவேண்டும். ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சரியான அஸ்திவாரம் போடவேண்டிய இடத்தில் ஆசிரியர்கள் தேவை. நகரங்களில் மாணவர்கள் பள்ளி நேரம் தவிர டியூசன் படிக்கின்றனர். படித்த பெற்றோர்களும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் கிராமபுற மாணவர்களுக்கு இவை எதுவும் கிடைப்பதில்லை. கல்வி முறையும் மாணவர்களின் மீது சுமை ஏற்றப்படுவதாக உள்ளது. பாடங்கள் முழுவதையும் மாலை 4மணிக்குள் படித்து முடிக்க இயலாது. முழுமையாக கற்க மாணவர்கள் பணம் செலவு செய்து டியூசன் செல்லவேண்டும். இதனால் அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைக்கும் என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
*ஆங்கில வழிகல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக 12வது பாஸ் செய்தவர்களும், டிகிரிபடிப்பில் தவறியவர்களும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். இவர்களின் கற்பித்தல் எந்த அளவில் இருக்கும்னு நினைக்கிறீங்க?
உண்மைதான் முதல்ல இங்கிலீஷ் மீடியமே இருக்ககூடாது. ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது இரண்டாம் மொழியாக இருக்க வேண்டும். பாடங்களை கற்றுக் கொடுப்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். தரம் குறைந்த ஆசிரியர்கள் பணிபுரிவதால் குழந்தைகளின் கேள்வி கேட்கின்ற உரிமை, குணம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. இதனால் அந்த குழந்தைகளுக்கு ஆங்கிலமும் பேசத்தெரியாது, தமிழும் பேசத்தெரியாது. அவர்கள் முழுவதும் மனப்பாடம் செய்தே பழகி விடுகின்றனர். இவற்றை மாற்ற, 12வது வகுப்பு வரை தாய் மொழியில் தான் பாடம் கற்பிக்கவேண்டும். என்பது "கல்வி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோளாக வைத்திருக்கிறோம். மேலும், 5வது வரையில், மொழியால் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கவேண்டும் என அரசைக்கேட்டு வருகிறோம். ஆங்கில வழிக்கல்வியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே அது படிப்பு என்பது போன்ற மாயை நடுத்தரவர்க்கத்தினரிடம் உருவாகிவருகிறது. ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க தனித்த முறையிருக்கின்றது. இதனைத் தாய்மொழியை கற்றுத்தருகின்ற முறைப்படி கற்றுத்தரக்கூடாது. எப்பொழுதும் 2ம் மொழியாகத்தான் ஆங்கிலத்தை வைக்க வேண்டும். ஸ்கூல் சிஸ்டம் 2 வகையில் நலிவடைந்து வருகிறது.
1 அரசு பள்ளிகளுக்கு எந்த வசதியும், செய்து தராதிருப்பது.
2 ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் கொடுப்பது.
அரசுப் பள்ளிகளில் வசதிகளும், ஆசிரியர்களும் குறைவாக இருப்பதால் மக்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். இதனால் வசதியுள்ளவர்கள் அரசு பள்ளிகள் பக்கம் வர விரும்புவதில்லை. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் கேள்வி கேட்கவே ஆள் இல்லாத நிலை உருவாகின்றது. சமீபத்தில் எங்களின் கல்வி என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட சர்வேயில் 29மாவட்டங்களில் உள்ள 8வது வரையுள்ள குழந்தைகளின் வாசிப்புத்திறன் மற்றும் கணக்கிடும் தன்மையை ஆய்வு செய்த போது, 5ம் வகுப்பில் படிக்கின்ற 60% குழந்தைகளால் 2ம் வகுப்பு பாடத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை, 8வது வகுப்பு குழந்தைகளால் 5ம் வகுப்பில் உள்ள கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டின் கிராமபுற பள்ளிகளில் உள்ள குழந்தைகளை அழைத்து பாடத்தை வாசிக்க சொன்னால், "குடு, குடு' வென வேகமாக வாசிக்கும். இடையில் நிறுத்தி, ஒரு வரியை படிக்க சொன்னால் தெரியாது. ஏனெனில் அது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் குழந்தைகளின் கல்விதரம் பீகார், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை விட மிக மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் , கற்றுக்கொள்கின்ற அளவு மிக குறைவு. கிராமபுற படிக்காத ஏழை மக்களின் குழந்தைகள் தான் அதிகமாக அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவு.பெற்றோர்களும் படித்தவர்களாக இல்லை. இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிகளுக்குள் நுழையவே பயப்படுவார்கள். ஒரு சிலர் வந்தாலும், படிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும்? போ வெளியே என்று சொல்லி விடுவார்கள். இதனால் அங்கே கேள்விகேட்க ஆளே இல்லை. இதற்கு தீர்வு வேண்டுமென்றால் பொதுகல்வி முறை ஒன்று உருவாக வேண்டும். இதில் ஊரிலுள்ள ஏழைகளின் குழந்தைகளும், கலெக்டர், அரசு அலுவலர்களின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்தால், அவர்கள் கேள்வி கேட்பார்கள். படிப்படியாக அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். இதனால் தான் பொதுக்கல்வி முறை வேண்டும்.என்கிறோம்.
* பீகார், சத்தீஸ்கர்,உத்திரபிரதேச மாநிலங்களில் மாணவர்கள் எவ்வாறு தமிழ்நாட்டை விட கற்கும் விகிதத்தில் உயர்ந்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் 90% குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. வட மாநிலங்களில் அப்படி இல்லை. ஒரளவு ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் மட்டும் பள்ளி செல்கின்றனர். இதனால் அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள்.என நினைக்கிறேன். இதற்கான சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தைகளாக இருக்கிறதால அவங்க அதிகம் படிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். சமீபத்திய கல்விக்கான கணக்கெடுப்புகளில் தொடர்ந்து பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவும், கற்கும் நிலை அதிகமாகவும் இருக்கிறது. ஒரிசாவில் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் ஒரியாவில் (தாய்மொழி)தான் படிக்கின்றனர். இங்கிலிஷ் மீடியத்திற்கு போறவங்க ரொம்ப குறைவு. எல்லோரும் தாய்மொழியில் படிக்கிறார்கள். அவங்களுக்கு நிறைய புரிகிறது.
நம்ம குழந்தைகளுக்கு இங்கிலிஷ்ல படிக்கிறதால பாடம் புரியுறதில்லை. நடுத்தர வர்க்க குழந்தைகள் எல்லாம் இங்கிலிஷ் மீடியம் படிக்கிறதால,ஆசிரியர்கள் அரசு தமிழ் பள்ளிகளில் இல்லை. இதனால் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக காணப்படுகிறது.
* உயர்கல்வி படிப்புகள் அனைத்தும் தமிழில் இல்லை மாணவர்கள் உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலை இருப்பதாக பேசப்படுகிறதே?
நிச்சயமாக இல்லை. மருத்துவக் கல்லுõரி முதல் பொறியியல் கல்லுõரி பாடங்கள் வரை அனைத்து படிப்புகளும் யாழ்பாணத்தில் தமிழில் இருக்கின்றன. நாங்கள் படிக்கின்ற காலங்களில் தமிழில் தான் படித்தோம். பல அரசு கல்லுõரிகளிலும் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தமிழிலும் ஆங்கிலத்துலும் நடத்துகின்றனர். ஆகவே தமிழில் பாடங்கள் இல்லை என்று சொல்லிட முடியாது.
* "சுமங்கலிதிட்டம்' என்ற பெயரில் மில் தொழில்களில் குழந்தை தொழிலாளர்களை ( பெண்) வேலைக்கு அமர்த்துவதால் பெண்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?
வேலையில்லாத நிலை இதற்கொரு முக்கியகாரணம். நிரந்தரமான வேலையிருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். குழந்தைகள் 12 வரை படித்தாலும் வேலையில்லை.இதற்கு மில் வேலைக்கு சென்றால் வாழ்வூதியமாவது கிடைக்கும். இதை தனிப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தீர்வு காண முடியாது. முதலில் வேலை வாய்ப்பு பெருகவேண்டும். பின்பு வளர்ச்சி தானாகவே வந்து விடும்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனை நிரப்பினால் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதெல்லாம் அரசுக்கு பெரிதாக தெரிவதில்லை. வேலை வாய்ப்பு அதிகரித்தால் தீர்வு கிடைக்கும்.
* சுய உதவி குழுக்களின் எழுச்சியை பெண்ணின் எழுச்சியாக கொள்ள முடியுமா?
ஒரு வகையில் வளர்ச்சி தான். சுயஉதவிகுழுக்களின் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது. ஒன்றாக கூடி விவாதித்து தீர்வு காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. முக்கியமாக வட்டிகாரர்களிடமிருந்து மீண்டு வாழ்கிறார்கள். பல பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வங்கியில் பணம் போடுவது லோன் வாங்குவது, சந்தையில் பொருட்களை வாங்குவது குழுவின் உற்பத்தி பொருட்களை விற்பது போன்றவற்றில் அனுபவம் பெருகின்றனர்.
மற்றொரு வகையில், உற்பத்தி செய்த பொருட்களை விற்பதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அன்றாடம் பயன்படுத்துகிற அனைத்து பொருட்களும் மிகப் பெரிய கம்பெனிகளினுடையவை. குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் கம்பெனிகளோடு போட்டி போட்டு விற்க வேண்டிய சூழல் உள்ளது. மல்டி நேஷனல் கம்பெனிகள் தருகின்ற விலைக்கு, இவர்கள் பொருட்களை தர இயலாது. ஒரு சில குழுக்கள் சில முக்கிய தொழில்களை கையில் எடுத்து திறம்பட செய்கிறார்கள். மகளிர் குழுக்கள் அனைத்தும் எழுச்சி அடைந்துவிடவில்லை.
* பொதுவாக அரசியல் அதிகாரங்கள் எப்படியிருக்க வேண்டும்?
அரசின் திட்டங்கள் சென்னையில் மட்டுமே தேங்கிவிடக்கூடாது. திட்டங்கள் பஞ்யாத்துகளில் உருவாக்கப்படவேண்டும். கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கிராம சபைகளில் உருவாகும் சட்டங்கள் தான் அமலாக்கப்படவேண்டும். மத்திய அரசின் கட்டமைப்பின் ஒன்றான பஞ்சாயத்துகளுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அதிகாரமும். நிதியும் வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பஞ்சாயத்திற்கு 8% தான் ஒதுக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் 32 முதல் 38% வரை வழங்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதாரமையங்களின் பராமரிப்பு பஞ்சாயத்துகளால் மட்டுமே சிறப்பாக செய்யமுடியும்.
* பாலியல் கல்வி தமிழக பல்கலைகழகங்களில் துவங்கபடவேண்டுமா?
அனைத்து மாணவர்களுக்கும் பாலியல் கல்வி அவசியம். இது மதர் தெரெஸா பல்கலைகழகத்தில் இருக்கின்றது. பாலியல் கல்வி என்பது அனைத்து துறைகளிலும் இருக்கவேண்டும். ஒரு துறையாக இருந்தால் சிலர் மட்டுமே படிப்பார்கள். எல்லாத்துறைகளிலும் ஒரு பாடமாக பெண்கல்வி இருந்தால் அனைவரும் படிக்க வாய்ப்புள்ளது.பொருளாதாரம் படிப்பவர்கள் பெண்களின் பொருளாதார நிலை பற்றியும், சமூகவியல் படிப்பவர்கள் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றியும், தங்களது பாடங்களில் பெண்கல்வியை இணைத்து கற்க வேண்டும்.
* வீட்டிற்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க உங்களின் யோசனை என்ன?
ஒவ்வொரு பெண்ணுக்கும் மணமுடித்து வாழ்கின்ற உரிமை உண்டு. மன வாழ்க்கைøயிலிருந்து சட்டப்பூர்வமாக விலகி கொள்ளவும். உரிமை உண்டு. என்பது பெண்களுக்கு தெரிய வேண்டும்.குடும்ப கவுரவும் குறைந்து விடும். என்பதற்காக பல பெண்கள் தங்களின் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை. அவர்கள் தாய்வீட்டிற்கு கூட செல்வதில்லை. ஒரு பெண் கொடுமைகளின் பேரில் புகார் செய்தால், அவளுக்கு மணவாழ்வும், பாதுகாப்பும் பெற்று தர சட்டத்தில் இடம் உண்டு. முதலில் பெண்களின் மாற்று வருமான வழிவகையும், தைரியமும், பெற்று தரப்பட வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் ஏதாவதொரு பெண் அமைப்பில் உறுப்பினராக இருக்கவேண்டும்.
* ஊடகங்களில் பெண்களின் நிலைக்கு தீர்வு என்ன?
பெண்கள் வியாபாரப்பொருட்கள். இது வணிக கலாச்சாரம். அழகு கலாச்சாரம் பெருக, பெருக இந்த வியாபாரமும் வளர்ச்சி பெறுகிறது. பெண்களின் உடல்கள் விற்கப்படுவதை போல, பிம்பங்கள் விற்கப்படுகின்றன. ஊடகங்களில் வலம் வரும் பெண்கள் அனைவரும் படித்தவர்கள் தான். இதனால் மக்கள் அத்தகைய ஊடகங்களை நுகராமல் இருப்பதே தீர்வாக அமைய முடியும்.
*தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனவா?
தொட்டிலில் போய் சேர்ந்த குழந்தைகள் மட்டும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், பல குழந்தைகள் இன்றும் மடிந்து கொண்டு தான் இருக்கின்றன. முழுவதுமாக வெற்றி பெற்ற திட்டமாக சொல்ல முடியாது.
*மாணவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து?
நிச்சயமாக மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். பலர் மாணவர்களை வர விடுவதில்லை. மாணவர்கள் அரசியலில் இறங்கினால் கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்பவர்களுக்கு பதில் தர இயலாததால் சிலர் தடையாக இருக்கிறார்கள். 1998 ல் அனைத்து கல்லுõரி முதல்வர்களையும் அழைத்து கல்லுõரிகளில் மாணவர் யூனியன் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். பல கல்லுõரிகளில் அமைத்தார்கள். ஆனால் இப்போது அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை
* "இன்டர்னல் அஸெஸ்மெண்ட்' பல முறைகேடான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கின்றனவே. அவை தேவை தானா?
இன்டர்னல் அஸெஸ்மெண்ட் என்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது மிகவும் தேவை. மாணவனின் வகுப்பறை விவாதங்களில் பங்கேற்பை அதிகரிக்கவும், அன்றாட வகுப்பறையில் திறமைகளை துõண்டுவதற்கும், மாணவர்களிடையே ஆரோக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். ஆனால் பலர் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களே இல்லை. இதனால் பல பாலியல் தவறுகளும் நடைபெற்றிருக்கின்றன. 50% மார்க் ஆசிரியர்களின் கையில் இருப்பதால் ,பெண்கள் வெளியே சொல்லாமல் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இன்டர்னல் மார்க்கை தவறாக பயன்படுத்துகின்றவர்கள் புனிதமான ஆசிரியர் வேலைக்கு தகுதியற்றவர்கள்.
* டிரஸ் தோடு பற்றி.......
பணம் படைத்த மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்வத்தை வெளிபடுத்தும் ஆடம்பர ஆடைகள் அணியக்கூடாது. அணிகின்ற ஆடைகள் மற்ற மாணவர்கள் பார்த்து ஏங்கும் வண்ணம் இருக்க கூடாது. மற்றபடி, விருப்பம் போல் அணிந்து கொள்ளலாம். ஒரு சில மாணவர்கள் கவர்ச்சி உடைகளை அணிகிறார்கள் என்பதால் எல்லோரையும் நிர்பந்திக்க கூடாது.
அனைத்து மாணவர்கள் பங்கேற்காத வெள்ளைக்கார முறையிலான பட்டமளிப்பு விழா தேவையா?
தேவையில்லை தான். அதை மாணவர்கள் தான் நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். அது உங்கள் விருப்பம்.
* தனியார் கம்பெனிகளின் வளாக தேர்வு மாணவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கிறதா?
கம்பெனிகள் சில அளவுகோல்கள் வைத்திருக்கின்றன. அவற்றை தொடும் மாணவர்களை தேர்வு செய்கின்றன. கல்லுõரி படிப்பில் மாணவனா. பாஸா, பெயிலா, என்பதெல்லாம் அவை பார்ப்பதில்லை.
19) துணைவேந்தராக மாணவர்களுக்கு நீங்கள் செய்ய நினைத்ததென்ன?
என் மனதில் நிறைய ஆசைகள் உண்டு. அதில் பல நிறைவேறாத ஆசைகள். மாணவர்கள் வகுப்பறைக்குள் மெல்லிய பிண்ணனி இசையோடு பாடம் கற்கவேண்டும். ஆய்வுக்கூடங்களிலும் இசை மனதின் சோர்வை போக்கி சுகமளிக்கும் விதமாக இருக்க வேண்டும். பல்கலைகழக வளாகத்திற்குள் உள்ள அனைத்து மரங்களிலும் ஊஞ்சல் போடவேண்டும். மாணவர்களும், மாணவிகளும் அவற்றில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். கருத்துக்களுக்கு சுதந்திரம் இருக்கவேண்டும். மாணவ, மாணவிகளின் மணம் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும். என்பது எனது நீண்ட நாள் ஆசை.
* பாடதிட்டங்கள் மாணவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கட்டிப்போடுவதாக பேசப்படுகிறதே?
பாடதிட்டங்கள் மாணவர்களுக்க வழிகாட்டுபவை தான். பரிட்சைக்காக மட்டுமே படிக்காமல் அறிவை வளர்த்துக்கொள்ள விசாலமான தேடல்கள் மாணவர்களிடம் தேவை. பாடதிட்டங்களோடு, வாழ்வியலையும் படிப்பது தான் மாணவ தேவைகளாக இருக்க வேண்டும்.
அ. இசைச்செல்வப்பெருமாள்
ஆர். பத்ம லதா
பி. வினோத்
ஜா. தினேஷ் அருமைநாயகம்.
ராதிகாவும், தேவயானியும்
பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வது சரியா?
மீடியாக்கள் தனது விற்பனையை அதிகரிக்கவும், விளம்பரதாரர்களைப் பெறவும், பல வழிகளை கையாண்டு வருகின்றன. மக்களின் உணவு, உடை போன்ற விசயத்தில் தலையிட்டு வந்த ஊடகங்கள், பின் அந்தரங்க விஷயத்திலும் தலையிட்டு இன்று தீர்வு சொல்கின்றன. தொடக்கத்தில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களால் வழங்கப்பட்டு வந்த ஆலோசனை, இன்று எவ்வித தகுதியும் இன்றி, நாடகங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் பிரபலமாக உள்ளவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
மீடியாக்கள் மூலம் புகழ் பெற்ற இவர்கள் மக்களின் அந்தரங்க விசயத்திற்கு ஆலோசனை கூறும் போது, உண்மையிலேயே அதற்குண்டான திறமையுள்ளவர்களா? அல்லது மனநலத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள்தானா? மீடியாக்கள் மூலம் கிடைக்கும் புகழை இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவது சரிதானா? என்பது பற்றி தமிழ்த்துறை பேராசிரியர் ராமசாமியை அணுகியபோது:
""மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இரண்டு முறைகளைக் கையாள்கின்றனர். ஒன்று ரகசியமாக பூசாரி, ஜோதிடர்கள், போன்றவர்களை அணுகுவது, யாகம் செய்வது, மற்றொன்று தனக்குள்ள பிரச்னையை இப்படி வெளிப்படையாக சொல்லி அது மூலமாக விடை தேடறது. இவங்களைப் பொறுத்தவரை தனக்குள்ள பிரச்னையை போலவே பலருக்கும் இருக்கும் என நினைக்கிறாங்க. இப்படி மீடியா மூலமாக கிடைக்கிற தீர்வு, அவங்களுக்கும் தீர்வா இருக்கும் என நம்பறாங்க. ஆனால் இப்படி மீடியா பாப்புலாரிட்டியால இப்படி சிக்கலுக்கு தீர்வு காண்பது ஒரு தவறான அணுகுமுறைதான்.
மக்கள் பிரச்னைகளை தேவயானி என்ற நடிகையிடம் அல்லாமல், ராதிகாவை ஒரு நடிகையாக பார்க்காமல் அபியாகவே, செல்வியாகவே நினைக்கின்றனர். ஏன்னா இவங்க மீடியாவில் புனிதர்களாகவும், இவங்களையே மையப்படுத்தி காட்டறதாலயும் அதை உண்மை என்று மக்கள் நம்ப வைக்கப்படறாங்க. இன்னைக்குள்ள வாழ்க்கை நடைமுறைல மனிதன் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கு எனவே அவன் தனக்கு எதிராக ஒரு சதி நடக்கிறதாகவே நினைக்கிறான். இதில் இருந்து மீளுவதற்காக கடவுளையோ அல்லது புத்திசாலித்தனத்தையோ நம்ப தொடங்கறான்.
மீடியாவில அபி, செல்வி இவங்க எல்லாம் புத்திசாலியா காட்டப்படறதால தன்னிடம் இல்லாத அறிவு அவங்ககிட்ட இருக்கிறதா நம்பறான். எல்லா சிக்கல்களையும் அந்த கதாபாத்திரம் தீர்க்கும் என எண்ணுகிறான். ஆனால் உண்மையில் கேள்விகளுக்கு பதில் சொல்ல, ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிபுணர்களை கலந்து பேசி அவர்கள் பதிலை செல்வி, அபி, பதில்களாக வெளியிடுகின்றார்கள். இது ஒரு குழு முயற்சிதான். இதோட முக்கிய நோக்கம் விற்பனையை அதிகரிப்பதுதான்.
இன்றைக்கு மீடியா 2 வகையான மக்களை தன்னோட வசம் வச்சிருக்க விரும்புது.
ஒன்று வாசகர்கள் இவங்க படிக்கவும், பார்க்கவும் மட்டும் செஞ்சுட்டு போயிடறாங்க. இரண்டாவதா (கச்ணூtடிஞிடிணீச்tஞுணூண்) இதில் பங்கேற்பவர்கள் இந்த வகையான மக்களை தக்க வைக்க இவர்கள் பலவகையான வழிமுறைகளை கையாளுகின்றனர். உதாரணமாக தங்கவேட்டைய குறிப்பிடலாம். இதில் பெரிய அளவு பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஆனால் மக்கள் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.
மீடியா இப்படி பிரச்னைகளுக்கு தீர்வு சொல்றதோட மற்றொரு நோக்கம். இந்த சமூகத்திற்கு நல்லது செய்வது போல காட்டுவதற்காக மக்களின் இந்த மனப்போக்கிற்கு இன்றைக்கு வந்ததல்ல. முந்தைய காலத்துல வீதியோற நாடகம் போடற பழக்கம் இருந்து வந்தது. அதுல திரௌபதி நாடகம் போடும் போது, அதில் திரௌபதியாக நடித்த கதாபாத்திரம் மேடையை விட்டு இறங்கும் போது, மக்கள் அவரை திரௌபதியாகவே கருதி காலில் விழுந்து வணங்குவர். ஆனால் அன்றைய நாடகங்களில் அனைத்திலும் ஆண் கதாபாத்திரங்களே நடிப்பர். திரௌபதி வேடத்திலும் ஆண்களே பங்கேற்பர். ஆனால் மக்களோ ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் கதாபாத்திரத்தோட ஒன்றிப் போய் சூடம் காட்டுவது, விழுந்து வணங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய மக்களின் மனப்போக்கிற்கு முன்னோர்கள் தொட்டே தொடர்ந்து வருகிறது.
இந்திய சமூகம் இன்னும் மாடர்ன், ஆகவில்லை. (கூணூச்ஞீடிtடிணிண கண்தூஞிடணி) மாறவில்லை. இன்றைய கல்வி முறையையும் இதற்கு காரணமாகக் கூறலாம். ஏனெனில் கல்வி இன்று தகவல் தரும் ஒன்றாகவே உள்ளது. அத்தகவல் வாழ்க்கையில் நெருக்கடிவரும் போது புரிதவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. தனிமனித பிரச்னையை புரிந்து கொள்ள வழிகாட்ட நமது கல்வி முறை தவறிவிட்டது.
வாழ்க்கை கல்வி இவற்றிற்கிடையேயான இடைவெளி பிரச்னைகளுக்கான தீர்வை வெளியே தேட வைக்கிறது. இப்பாடத்திட்டத்தினால் என் வாழ்க்கைக்கு என்ன பயன் என மாணவன் ஆசிரியரிடம் கேட்பதில்லை. ஆனால் நடிகைகளிடம் கேட்கிறான். இந்நிலை மாற ஆசிரியர்கள் தீர்வு சொல்ல முன்வர வேண்டும. ஏன்னா நமது பழைய குருகுல கல்வி முறை இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்னைக்கு பொய்யான இடத்தில் பதிலை தேடிப் போய்க்கிட்டு இருக்காங்க. இது ஆபத்தான போக்கு. ஏன்னா இந்த மீடியா பிரபலங்களே பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாக வரலாம்' என்றார்.
இது பற்றி தொடர்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் கூறுகையில்:
"இது சந்தைப்படுத்துதலின் ஓர் அம்சமாகும். பாரம்பரியத்திலிருந்து நவீனயுகம் நோக்கி செல்வதையே இது குறிக்கிறது. மக்களுக்கான பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது என்பது எல்லோராலும் செய்யக்கூடிய காரியம் அல்ல. அத்துறையில் நிபுணர்களால் தான் இதை செய்ய முடியும். மீடியா மூலம் புகழ்பெறும் இவர்கள் ஒரு சிறந்த உளவியல் நிபுணரின் பணியைச் செய்ய முடியாது. இவர்கள் தங்களைத் தானாகவே ஆலோசனை கூறுபவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். மீடியாவும், இவர்களைப் பயன்படுத்தி தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் மக்களைத் தன்பக்கம் அதிக அளவு கவர்ந்து இழுக்கிறது. தனது விற்பனை லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது.
மீடியா மூலம் பிரபலமாகும் இவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் நமது சொந்த சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் நிலைக்கு தகுதியானவர்களாக இருக்க முடியாது என்பது நாம் அறிந்த ஒன்றே. மீடியா இவர்களை விளம்பரங்களுக்கும், க.கு.அ. (கதஞடூடிஞி ஞுணூதிடிஞிஞு அணணணிதணஞிஞுட்ஞுணt)போன்வற்றிற்கும் பயன்படுத்தாமல், ஏன் ஆலோசகராக பயன்படுத்த வேண்டும்? மீடியா மூலம் சிறந்த நடிகையாக மட்டும் இவர்களால் பிரதிபலிக்க முடியுமே தவிர, ஒரு மருத்துவராகவோ அல்லது மனநல நிபுணராகவோ மாற முடியாது.
முன்பு மீடியா, பிரபலங்களை பொதுமக்களுக்கு கருத்துகூறவோ அறிவுறுத்தவோ விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. ஆனால் இன்று அதுவே அவர்களை மனநல ஆலோசர்களாகவும் மாற்றியுள்ளது.
இது மக்கள் ஊடகங்களில் பார்க்கும் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடும் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. தனது சொந்த வாழ்வில் அனுபவிக்கும் பாதிப்புகளை, ஊடகங்களில் பார்க்கும் அக்கதாபாத்திரங்களும் அனுபவித்து அதற்கு தீர்வு காணும் போது, இவர்கள் கதாபாத்திரத்தோடு ஒன்றி தன்நிலை இழக்கின்றனர். ஆனால் வளர்ந்த நாட்டிலும் இத்தகைய செயலை மக்கள் அனுமதிப்பதில்லை. இங்கோ, மீடியா மூலம் இவர்களிடம் மாட்டியவர்கள் வாசகர்கள் ஆவர் என்றார்.
மீடியா தனது இந்தப் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் மக்களும் தங்களது மனநிலையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். ஊடகங்களையும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் வேறுபடுத்திப் பார்த்து, தீர்வுகாண முற்பட வேண்டும்.
படம், செய்தி: ஆர்.பத்மலதா
Tuesday, November 01, 2005
கருவாடு அரவை ஆலையால் ஊரே மணக்கிறது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் சார்ந்த சமூகரெங்கபுரம் முத்து பிஷரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற "உலர் கருவாடுதூள் அரவை ஆலை இயங்கி வருகின்றது. இந்த ஆலை ஏற்படுத்தி வரும் மாசுபாடால் இதனைச் சுற்றியுள்ள கும்பிகுளம், ராதாபுரம், தெற்குகள்ளிகுளம் சேர்ந்த கிராமத்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த ஆலை 2002லிருந்து இயங்கி வருகிறது. இங்கே அரைக்கப்படும் ஈரமான மீன்களால் ஏற்படும் துர்நாற்றம். இதன் அருகிலுள்ள சீலாத்திகுளம் ஊர் முழுவதும் வீசுகிறது.
இதைப்பற்றி அந்த ஊரைச் சார்ந்த கருப்பசாமி நாடார் கூறியதாவது, ""மீன் அரவை ஆலையினால் ஏற்படும் கழிவுநீர் மழைநாட்களில் இங்கே இருக்கும் தாய்க்குளத்துடன் சேர்வதால் இந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. ஆடு, மாடு கூட இந்த நீரை குடிக்க முடியவில்லை''.சீலாத்திகுளம் பஞ்சாயத்து தலைவர் வேணுகோபால் கூறுகையில், இந்த ஆலையினால் இங்கே வரும் ஈக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கும்பிகுளம் கிராமத்து மக்களுக்கு தலைவலி, ஒவ்வாமை, பேதி ஏற்படுவதாக கூறுகிறார்.அதே ஊரைச் சேர்ந்த எல்.ஐ.சி.யின் ஏஜென்ட் கூறுகையில் இந்த நாற்றத்தினால் எனக்கு தலைவலி நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது பேதியும் கண்டுள்ளது, ஊரை காலி செய்துவிடலாம் என்று கூட தோன்றுகிறது என்றார். இராதாபுரத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் சட்டதிட்டத்தின் கீழ், ஆலைகள் நகரத்தை அல்லது குடியிருப்பு பகுதியை விட்டு 6 கி.மீ காக்ககை பறக்கும் தொலைவில் கட்டப்பட வேண்டும் என்று காற்று மாசுபடுதல் தடை சட்டத்தின் (1981) கீழ் உள்ளது. இவர்கள் கட்டிய ஆலையின் துõரம் அதைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சாலை போகும் மார்க்கமாக போனால் மட்டுமே 6 கி.மீதுõரம் வருகிறது. ஆனால் காக்கை பறக்கும் துõர கணக்கில் அளவிட்டால் 1 .5 கி.மீ. துõரம்தான் இருக்கிறது சீலாத்திகுளம் கிராமம். இதனால் இந்த நிறுவனத்தின் மாசு சீலாத்திகுளம் கிராமத்தை நேரடியாக தாக்குகிறது.முதல்வரின் தனிப்பிரிவு மனுவின்படி 28.11.2003 அன்று சுகாதாரதுறையின் இயக்குனர் என். ஐயனார் என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகமூடி, விசேட காலணிகள் கையுறை கொடுக்க வேண்டும். மீன் காயப்போடுவதற்காக பயன்படுத்தி வரும் 250 து 50 அடி கொண்ட கான்கரீட் பிளாட்பாரத்தை தகர்த்துவிட்டு, அங்கே 200 மரங்களை நட வேண்டும். துர்நாற்றத்தால் மக்களின் ஆரோக்கியம் கெடுவதாலும் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாலும் உடனடியாக உலர்மீனைப் பொடியாக்குவதை நிறுத்த வேண்டும்''. என்று ஆணை பிறப்பித்துள்ளார்.தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2002ல் இவர்களுக்கு அளித்த அனுமதியின் கீழ் சில நிபந்தனைகள் விதித்துள்ளது அதில் முதன்மையானது.""மீன்பிடி நடக்கும் இடத்திலிருந்து இந்த ஆலைக்கு கொண்டு வரக்கூடாது'' என்பது ஆகும்.மாசு கட்டுபாட்டு வாரியம் 11.12.03அன்று அந்த ஆலையில் நடத்திய ஆய்வில் இங்கே உருவாகும் கழிவு நீரை எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் வெளியேற்றப்படுவதும். நாற்றமும், ஈயினால் ஏற்படும் அசௌகரியங்களும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் 2004ல் சுகாதார பணி இயக்குனர் கருவாடு தொழிற்சாலை இயங்க தடை விதித்திருந்தார். அந்த தடையின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கருவாடு தொழிற்சாலை இயக்குனர் இடைக்காலத்தடை வாங்கியுள்ளார். இடைக்காலத்தடையின் பேரில் அந்த தொழிற்சாலை இன்றளவும் இயங்கிவருகிறது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் கருத்தறிய முற்பட்ட போது, முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை.
கட்டுரை, படங்கள்:பா.வினோத்
Tuesday, October 25, 2005
பரபரப்பு இதழியல் வெல்க என்று கொட்டு முரசே
தென்னிந்தியாவில் ஊடகங்களை நடத்தி வரும் சன் குழுமம். அச்சு ஊடகத்தின் முதல் தினசரி வெளியீடாக தமிழ் முரசு மாலை நாளிதழை Tabloid வடிவில் வெளியிட்டுள்ளது. வாசகர்களை கவர்வதற்காக வண்ணமயத்துடன் 20 பக்கங்களுடன் முதல் நாள் 20,000 பிரதிகளும் பின் வரும் நாட்களில் 50,000 பிரதிகளும் விற்பனையாவதாக தெரிகிறது. பத்திரிகையை வாங்குபவர்களுக்கு இலவசப் பரிசுகளையும் வழங்கி வந்துள்ளது.தமிழ் முரசு மாலை நாளிதழ் வருகை அனைத்து தரப்பு மக்கள் மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களிடையே எதிர்பார்ப்பு காணப்பட்டது. செய்திகள் குறைவாக காணப்படுகிறது. நகரச் செய்தி தகவல்கள் குறைவாக உள்ளன. குற்றம் தொடர்பான செய்தி தகவல்கள் நெகிழ்வுரையாக வெளிவருகின்றன. சினிமா தொடர்புடைய செய்திகளும் அதற்கான புகைப்படங்களும் அதிக அளவில் உள்ளது.
ஓர் மாலை நாளிதழ் 20 பக்கத்துடன் வெளிவருவது புதிதாக இருந்தாலும் செய்திக்கு முக்கியத்துவம் தரப்படாமல் உள்ளது. நடிகை புகைப்படத்தை தவிர்த்து செய்திக்குரிய புகைப்படம் முதலியவற்றை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.இதுவரை நாளிதழுடன் இலவச மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். செய்தியின் தலைப்பு பெரியதாகவும் அதன் வடிவமைப்பு நன்றாகவும் உள்ளது. செய்தியின் தரம் கேள்வி குறியாக உள்ளது. பக்கங்கள் வண்ணமயமாக காணப்படுகிறது.ஓர் செய்திதாளின் விற்பனை அதிகரிக்க இலவச பரிசுகள் வழங்கினால் மட்டும் போதாது செய்தி அதிகமானதாக இருக்க வேண்டும் என நெல்லை ம.சு.பல்கலைக் கழக தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்த ராஜு கூறினார். தமிழ் முரசு நாளிதழ் பற்றி தொடர்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரனிடம் கேட்ட போது. மேற்கத்திய நாடுகளில் வெளிவரும் செய்திதாள்களில் வேறுபட்ட பத்திரிகைகளுள் Tabloid வகையும் ஒன்றாகும்.இவ்வகை பத்திரிகை செய்தித் தாளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. Spreadsheet நாளேடுகள் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை. விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதில்லை. அதனை தவிர்த்து மக்கள் தொடர்புடைய செய்தி தகவலுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.Tabloid பத்திரிகைகள் தனி நபரின் வாழ்வு பொது வாழ்க்கையில் தொடர்புடையவர், அரச குடும்ப வாரிசுகள், கலைத்துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தொடர்புடைய பிரபலங்களின் செயல்பாடு பற்றி அறிய ஓர் குறிப்பிட்ட வாசகர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரபலங்கள் பற்றிய தகவலை சேகரித்து எடுத்துச் செல்வதே Tabloid ஆகும். இயல்பாகவே மனித மனமானது பிறர் பற்றிய ரகசியத் தகவல்களை அறிய ஆர்வம் காட்டுகிறது.அவற்றை பூர்த்தி செய்வதற்கு வடிகாலாக பிரபலங்களின் தனிப்பட்ட தகவலை அறிய முடிகிறது. மனிதனின் இத்தகைய எண்ணமே Tabloid பெருகக் காரணம். இவற்றில் வெளிவரும் தகவல்கள் பரபரப்புடன் கூடியதாவும், பிரபலங்கள் சமூக வாழ்க்கையுடன் கொண்டிருக்கும் தொடர்பில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்.இந்தியாவில் Tabloid முதலில் மும்பையில் BLITZ என்னும் பெயரிலும் MID DAY என்ற டில்லியில் பெயரிலும் வெளிவருகிறது. தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தமிழ் முரசு இதழானது அதன் வடிவம் மட்டுமே Tabloid முறையில் வெளிவந்துள்ளது. அதன் உள்ளடக்கம் செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் முதலியவை பல்வேறு இதழ்கள் வெளியிடும் கருத்து தகவலின் ஓர் தொகுப்பாக மட்டுமே இந்த இதழ் உள்ளது என்றார்.விற்பனை பிரதிகள் அதிகமாக விற்பனை ஆவதைப் பொறுத்து ஓர் நாளிதழின் வளர்ச்சியை குறிப்பிட முடியாது. எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்துள்ள தமிழ் முரசு நாளிதழ் எப்படி தொடர்ந்து ஒலிக்கப்போகிறது என்பதைக் கண்காணிக்க தமிழகம் காத்திருக்கிறது என்பதே நிஜம்.
கட்டுரை: எம்.மாரியப்பன்
படங்கள்: வி.வி.ஆர்.சுப்பிரமணியன்.
Tuesday, October 18, 2005
அனைவருக்கும் கல்வி அளிக்க அரசு தவறி விட்டது: வசந்திதேவி
உலகமயமாக்கலின் தீவிர வளர்ச்சியில் கல்வியின் நிலை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நெல்லை.ம.சு பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி "உலக மயமாக்கலும் கல்வியும்'' என்ற தலைப்பில் சங்கீத சபாவில் உரையாற்றினார்.""இந்த நாட்டில் கல்வி காப்பாற்றப்பட வேண்டுமானால் கல்வி மூலம் சமூகம் காப்பாற்றப்பட வேண்டும், அதற்கு மாணவர்கள் போராட வேண்டும். இதனை மாணவர் சங்கம் சிறப்புடன் செய்து வருகிறது. உலகமயமாதல் என்பது 90 களில் துவங்கி இன்று தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் 21ம் நுõற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் இருக்கிறோம். உலகமயமாக்கலின் வளர்ச்சியை இப்போதாவது தடுத்து நிறுத்த வேண்டும். இது அறிவு உலகம். கல்வி பிரமாண்டமான உற்பத்தி சக்தியாக உள்ளது. இது குறிப்பிட்ட வர்க்கத்தினரின் கையில் சிக்கி இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. அடிமட்டத்து மக்களுக்கு கல்வி தான் விடுதலை அளிக்கும் கருவி, கல்வி அடிமைதனத்திலிருந்தும் ஏழ்மை நிலைமையிலிருந்தும் மக்களை மீட்க கூடியதாகவும் அமைய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போல கல்வியிலும் சமன் அற்ற நிலையைக் காண முடிகின்றது. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம் சமத்துவம். இன்றைய கல்விக் கொள்கை சமத்துவத்திலிருந்து விலகிச் செல்கிறது. நாட்டிலுள்ள அனைவருக்கும் சமமான கல்வியளிக்க இந்திய அரசு தவறிவிட்டது. அரசுப் பள்ளிகளிலும், கிராமப் பஞ்சாயத்து பள்ளிகளிலும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்குத்தான் கல்வி தரப்படுகிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு ஆங்கிலக் கல்வி என்ற நிலை இருக்கிறது. தமிழ் வழிக் கல்வி என்பது சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் அடிப்படைவசதிகள் கூட இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. 1970க்குப் பின் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்திருத்தத்தில் அனைவருக்கும் சமமான கல்வி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கு கட்டணம் செலுத்திப் படிக்கும் படிப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. "வானமே எல்லை' என்பது இன்றைய இளைஞர்க்கு மட்டும் தான், வரலாறு காணாத கனவுகளை திறந்துவிடும் காலமிது. ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நடை பெறுகின்ற வளாக நேர்காணலின் மூலம் மாணவர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கொத்திச் சென்று விடுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் மிக சிலருக்குத் தான் கிடைக்கிறது. இந்நிறுவனங்கள் மீதான இளைஞர்களின் மோகம் வேதனை அளிக்கிறது. தமிழ் நாட்டின் தொழிற் கல்லுõரிகளில் உள்ள 80,000 இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் என்பதில் ஊடகங்கள் முறையான அக்கறை காட்டுவதில்லை. வசதிபடைத்தவர்கள் விருப்பத்திற்குத் தக்க அந்த பிரிவினருக்கு மட்டும் தான் தரமான கல்வி வழங்கப்படுன்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு வேண்டாம். அவர்களின் பள்ளித் தேர்வு முடிவுகள் போதுமானது என்பது வரவேற்கத் தக்கது. கிராமம், நகரம் என்று பிரித்தால் மட்டும் போதாது. அவர்களில் ஏழை மாணவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் பொருளாதார நிலையை அவனது பள்ளி அரசு பள்ளியா? தனியார் பள்ளியா? என்பதைப் பொறுத்து நிர்ணயித்து விடலாம். தமிழ் மீடியத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் நியாயமானதாக இருக்கும். இந்திய சமூகத்தில் அனைவருக்கும் சமமான கல்வி அளிப்பது அரசின் கடமை என இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தாரி கமிஷன் வலியுறுத்திய, அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது ஒரே மாதிரியான பாடத்தைத் திணிப்பது அல்ல. சமமான தரமான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதனை வலியுறுத்திப் போராடினால் கல்வி பொதுவுடைமை ஆகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பொதுவான கல்வி முறை இருக்கிறது. வட்டார மொழிகளில் தான் கல்வி தரப்படுகின்றது. பொதுப் பள்ளிக்கல்விக் கொள்கைக்கான தீர்மானம் பாராளுமன்றத்தில், 1968, 1986, 1992ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கலின் நுழைவினால் இக் கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. கல்விக்கான முழு பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய மொத்த உற்பத்தியில் 6% கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும் என்பது அரசின் குறிக்கோள், ஆனால் 4% நிதியைக் கூட இன்னும் ஒதுக்க முடியவில்லை. 10 ஆண்டுகளில் நுõறு ரூபாய்க்கு அறுபது பைசா செலவழித்தால் கூட அனைவருக்கும் சமமான கல்வியை அளித்திட முடியும். இது குறித்த கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற சர்வசிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி) முறை கூட கடன் வாங்கித்தான் நடத்தப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை முறையான திட்டம் தேவையில்லை. மாற்றுத்திட்டம் மட்டும் போதுமானது. 5ஆம் வகுப்பு வரை உள்ள கிராமப்புற பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் தான் இருக்கின்றனர். நலிவுற்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு கல்வி கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளது. உலகமயமாக்கலில் பொருளாதாரத்துறையில் ஏற்பட்ட தாக்கங்களால் வாழ்க்கை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நவீன காலக்கல்வி இரட்சகன், கோயில் என்று தகவல் தொழில்நுட்பத் துறையை கனவு காண்கின்றனர். ஆனால் இதன் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. வேலையின்மையினால் படித்தவர்களுக்கும் வாழ்க்கை வாய்ப்பு குறைந்து வருகிறது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் போட்டி நிறைந்த உலகத்திற்கு குழந்தைகளும் தள்ளப்படுகிறார்கள். கல்வி என்பது முக்கோண வடிவில் உள்ளது. இதன் உச்சியை பிடிப்பது யார் என்ற போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. குழந்தைகள் நர்சரி பள்ளியிலிருந்தே நசுங்கிப் பிழியப்படுகிறார்கள். சக மாணவர்களை நண்பர்களாக பார்க்காமல் போட்டியாளர்களாகவே பார்க்கிறார்கள். கட்டுரை: அ.தேன்மொழி, மா.கலாவதி கட்டண அடிப்படையில் செயல்படுகிற கல்வி நிறுவனங்கள் அரசிடமிருந்து கட்டிடங்களை இலவசமாய் பெறுகின்ற போது ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கு 50% இடமும், கட்டண கல்விக்கு 50% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென சட்டவரைவு கூறுகிறது. கல்வி பிரமாண்டமான ஒரு ஆயுதம். இது ஆதிக்க வர்க்கத்தின் கைகளில் சென்றுவிடாமல், மக்கள் கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்திய சமத்துவம் மிக்க நாடாக வளரும். இதற்காக இந்திய மாணவர் சங்கம் பாடுபட வேண்டுமென மாநாட்டு சிறப்புரையில் கூறினார்.
கல்வியை வியாபாரமாக்கலாமா?
நெல்லை சங்கீதசபாவில் நடைபெற்ற 20வது குஊஐ மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், பொருளாதாரத்துறை பேராசிரியர் பிரபாத் பட் நாயக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையின் இரு முக்கியக் காரணிகளாக "உயர்கல்வியையும், உலகமயமாக்களையும்' குறிப்பிட்டார். இவரின் ஆங்கில உரையை தமிழில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா மொழி பெயர்த்தார். ""இந்த சமூகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அறிவு ஜீவிகள் கூட்டம் தேவை என்றார். ஏனெனில் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த இவர்களால் தான் முடியும். இந்தியாவில் உயர்கல்விக்கு நிதி ஒதுக்குவது என்பது தேவையற்ற ஒன்றாக கருதப்படுகிறது. துவக்கக்கல்வி முன்னேற்றத்திலேயே அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இன்றைய விடுதலை பெற்ற இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்''. நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்க நாட்டில் வெள்ளையர்களால் 2ம் தர குடிமக்களாக கருதப்படும் கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதியானது, இந்தியாவில் மக்களின் கல்விக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானது ஆகும் என்றார். உலகமயமாக்கல், உயர்கல்வியில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க பிரதமர் மன்மோகன்சிங்கின் அமெரிக்க பயணத்தைக் குறிப்பிட்டார். பிரதமர் ஆலோசனைப்படி மேலை நாட்டு பல்கலை கழகங்களுடன் இணைந்து நமது உயர்கல்வி முறையை மேம்படுத்த நினைத்தோமானால் அது கல்வியில் 2ம் தரமென நம்மை நாமே தாழ்த்தி கொள்வது போலாகும். மேலும் மேலை நாட்டு பல்கலை கழகங்களில் பாடத்திட்டமானது இந்திய தலைவர்களின் வரலாற்றை மறைக்கும் ஒன்றாகவே அமையும் என்று கூறினார். விடுதலைப் போராட்ட காலத்தில் கல்வியானது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட உதவும் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று அது வியாபாரமாகிவிட்டது. கல்வியை இருமுறைகளில் பார்க்கலாம். 1) கல்வியை சரக்காகப் பார்ப்பது. 2) கல்வியை மக்களுக்கு நன்மை பயக்க கூடியதாய் பார்ப்பது. கல்விக்கு அரசு போதிய மானியம் வழங்காமல் அதை தனியார் மயமாக்கினால், கீழ்க்கண்ட பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 1) அதிகம் பணம் கொடுத்து படிக்கும் மாணவர்கள், அதன் உள்ளடக்கத்தையே நிர்ணயிக்க முற்படுவர். 2) ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வு நிறைந்துள்ள நம் சமூகம், பணம் உள்ள மாணவர்கள், பணமில்லாதவர் என்ற இரு பிரிவினையை உண்டாக்கும். இறுதியில் பணம் கொடுக்க இயலாத மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டினார். மேலும் தொடர்ந்து அவர் உரையில்: இந்திய அரசு முனைப்புடன், பணத்தை ஐஐகூ, ஐண்ஈஐஅண் ஐண்குகூஐகூக்கூஉ ஓஊ Mஅண்அஎஉMஉண்கூ யில் பயிலும் மாணவர்களுக்காக செலவிடுகிறது. ஆனால் இங்கு படிக்கும் மாணவர்களோ அமெரிக்கா போன்ற மேலை நாடுகளால் விரும்பப்படுகின்றனர். அவர்களும் அயல்நாட்டு வேலைக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இம்மாணவர்கள் படிப்பிற்கான செலவினை வரியாக செலுத்துபலவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் ஆவர். எனவே இந்திய மக்களின் வரியில் படித்துவிட்டு அயல்நாட்டில் கூலி வேலை பார்ப்பது தவறு என்றார் பட்நாயக். உயர்கல்விக்கு ஒதுக்க நிதி இல்லை என கூறும் மத்திய அரசும் ஆண்டு வருவாய் இழப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதனை மாநில அரசின் மீது சுமையாக மத்திய அரசு ஏற்றியது. ஒதுக்கீடுகளை குறைத்து மாநில அரசின் கடன் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் மாநில அரசு கல்விக்கான ஒதுக்கீட்டை குறைக்கிறது. மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மாநில அரசிற்கு கடனளிக்க பன்னாட்டு வங்கிகள் முன் வருகின்றன. இவை மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும் என கூறினார். இறுதியாக அவர் கூறுகையில், விடுதலைக்கான போராட்டத்தில் நாம் நம்மை முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென்றார்.
நகரங்களோடு கைகோர்க்கும் கிராமங்கள்
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசு கிராம வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் நகரங்களிலிருந்து துண்டுபட்ட கிராமங்களை இணைக்க மத்திய அரசால் "" பிரதம மந்திரி கிராம சாலை திட்டம்'' கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதி திட்டம் நெல்லை மாவட்டத்தின் திருப்பணி கரிசல் குளம் என்ற கிராமத்தை பிரதான சாலைகளுடன் இணைத்து வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் மத்திய அரசின் கிராம சாலை திட்டம் துவங்கப்பட்டது. 2000 2007 வரையிலான 7 ஆண்டுகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் நகரங்களோடு இணைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். கிராமங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனை, சந்தை போன்றவற்றிக்காக நகரங்களைச் சார்ந்திருக்கின்றன. விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மூலிகைகள் மற்றும் உணவு தானியங்களை விற்க நகரச் சந்தைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமங்கள் உள்ளன. கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் "" பிரமத மந்திரி கிராம சாலை திட்டத்தை'' மத்திய அரசின் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முழுவதுமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையினால் கடந்த 20032004ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 20042005யிலிருந்து இத்திட்டம் நெடுஞ்சாலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது, அத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் நான்கு பகுதிகளைக் கடந்து 5வது பகுதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியில் திருநெல்வேலியில் ( 20002001 ) நாற்பத்தி ஒரு சாலைகள் 71.893 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 590.590 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதியில் ( 2001 2002 ) இருபது சாலைகள் 38.480 கிலோ மீட்டர் தொலைவில் ரூ. 387.685 கோடி செலவில் போடப்பட்டன. இரண்டாம் பகுதி சாலைகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய கிராம சாலை மேம்பாட்டு அமைப்பு, சில புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதன் பின் மக்கள் தொகை 500க்கு மேற்பட்ட கிராமங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மூன்றாவது பகுதியில் ( 2003 2004 ) 68 சாலைகள் 130.855 கிலோ மீட்டர் துõரத்திற்கு ரூ. 1456.290 கோடிகள் செலவில் போடப்பட்டன. இவை அனைத்தும் திருநெல்வேலியின் குக்கிராமங்களின் 238 வாழிடங்களை இணைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் போடப்பட்ட கிராம சாலைகளின் தரத்தை நிர்ணயம் செய்ய மூன்றடுக்கு மேற்பார்வை குழுக்கள் இயங்கி வருகின்றன. ( முதல் குழு ) ஊரக வளர்ச்சி முகமையின் தலைமைப் பொறியாளர், துணைப் பொறியாளர், சிறப்புப் பொறியாளர் ஆகியோர் கொண்ட குழு முதலில் பார்வையிடுகிறது. அதன் பின் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் குழு சாலையின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சாலைப்பணி முழுவதுமாக முடிவுற்ற பின் தேசிய அளவிலான பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் குழு டெல்லி தேசிய ஊரக சாலை மேம்பாட்டு அமைப்பால் அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய குழுவினால் ""திருப்தி'' என சான்று அளிக்கப்பட்ட பின் முழுவதுமாக நிறைவு பெற்ற சாலை ஆகிறது. இதுவே தார்ச்சாலைகளின் உயர்வான தரத்திற்கு காரணம் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் துணை முதன்மை பொறியாளர் செல்வராஜ் கூறுகிறார். நெல்லையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட திருப்பணி கரிசல் குளம் விவசாயத்தை நம்பி வாழும் கிராமம். 2004 2005ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி பிரதான சாலையில் கொண்டநகரத்துடனும் தென்காசி பிரதான சாலையில் அபிஷேகப்பட்டியுடனும், இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாலையின் பயன்பாடு குறித்து இக்கிராமத்தை சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் சுப்பிரமணியனிடம் கேட்டேன்: "" இந்த சாலை எங்கள் ஊர் குளக்கரைக்கு அருகில் வயல்களின் ஓரத்தில் போடப்பட்டுள்ளது. குளத்துபாசனத்தினால் சாலையை அடுத்துள்ள 600 ஏக்கர் நிலங்கள் விளைக்கின்றன. இதில் கார் பருவத்தில் நெற்பயிரும், கோடை பருவத்தில் பருத்தி, வெண்டை, முருங்கை, சோளம் போன்றவற்றை விளைவிக்கிறோம். விளைந்த பொருட்களை ஒற்றையடிப் பாதை வழியாகத் தான் தலைச் சுமையாக கொண்டு வந்தோம். மழை காலத்தில் குளத்து தண்ணீரின் கசிவினால் சக்தி ஏற்பட்டு வயலுக்கு செல்ல வழியின்றி கஷ்டப்பட்டு கொண்டிந்தோம். முட்களும், புதர்களும் நிறைந்து கிடந்த ஒற்றையடி பாதையில் இரவு நேரம் பாம்புகளுக்கு பயந்து நீர் பாய்ச்ச செல்ல பயந்து கொண்டிருந்தோம். போக வர வசதியில்லாததால் என் மனைவி வயலை விற்கச் சொல்லி விட்டாள். இந்த சாலை வந்த பின் பறித்த காய்கறிகளையும், அறுவடை செய்த நெல் மூட்டைகளையும் வயல் அருகிலேயே பைக், ஆட்டோ மற்றும் வேன்களை நிறுத்தி சந்தைக்கு ஏற்றி செல்கிறோம். பறித்தவுடன் சீக்கிரமாக சந்தைக்கு கொண்டு செல்வதால் காய்கறிகள் வாடாமல் இருக்கின்றன. இந்தச் சாலையில் நகரப்பேரூந்து வசதியிருந்தால் பொருட்கள் மற்றும் ஆட்களை ஏற்றி செல்வது எளிதாக இருக்கும் ''.
28 ஆண்டுகளாகத் தொடரும் சூர்யா திரைப்பட விழா
இருபத்தி எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூர்யா திரைப்பட விழா இந்த வருடம் செப்டம்பர் 21ம் தேதி திருவனந்தபுரத்தில் துவங்கியது. கலாபவன் திரையரங்கில் இவ்விழாவை நடிகர் மோகன்லால் தொடங்கி வைத்தார். இவ்விழா திரைப்படம் மட்டுமின்றி பாட்டு, இசை, நடனம், நடிப்பு என 75 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில படங்கள் பற்றிய விமர்சனங்கள்... மனித மனம், மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட படம் சஞ்சாரம். விஜிபுல்லாப் பள்ளி இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம். சிறு வயது முதலே ஒன்றாக வளரும் தோழிகள். இவர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட உறவினை ஏற்றுக் கொள்ளாத சமூகம். இதனால் மனதளவில் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகுவதை பற்றிய திரைக்கதை. இயக்குநர் "குக்கூ' இயக்கத்தில் வெளியான "ஒராள்' மலையாள திரைப்படத்தில் நடிகர் முகேஷ் கதையில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். திரைக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக நினைத்து மனநோயாளியாக மாறும் திரைக்கதை. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும் சிறந்த முறையில் எடுக்கப்பட்டது. கண்ணே மடங்கு என்ற மலையாள திரைப்படம் உண்மை சம்பவம் மட்டுமின்றி இயக்குநர் ஆல்பர்டின் முதல் திரைப்படம். இத்திரைப்படம் 15 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஏழ்மை குடும்பத்தில் பிறந்த நாயகி, குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. தந்தையின் மருத்துவ செலவிற்காகவும், தங்கையின் படிப்பிற்காகவும் வேலைக்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிய திரைக்கதை. திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிப்பதாக அமையும். கண்ணே மடங்குக என்ற கதைவரியிலும் இயக்குநர் ஆல்பர்டின் படைப்பு தன்னிறைவு பெறுகிறது. ஜெயராஜ் இயக்கத்தில் உருவான தைவ நாமத்தில் என்ற மலையாளத்திரைப்படம். இஸ்ஸாமிய தீவிரவாத இளைஞனின் கதை. மதம் தீவிரவாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இஸ்லாம் என்பதற்கு சமாதானம் என்பது பொருள் என மிகவும் எளிமையான முறையில் உணர்த்தியுள்ளார். ஜெயராஜ் இயக்கத்தில் உருவான மற்றொரு படைப்பு "மகள்க்கு' மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த குழந்தை தாயோடு மனநிலை சிகிச்சை முகாமில் சேர்க்கப்படுகிறது. குழந்தையின் வரவால் மனநிலை இழந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் திரைக்கதை. லால்ஜி இயக்கத்தில் உருவான சிதறியவர் எனும் மலையாளத்திரைப்படம். பிற்படுத்தப்பட்ட இளைஞனைப்பற்றிய திரைக்கதை. வேலை தேடிச் செல்லும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை விரும்பாத அவன் இறுதியில் விருப்பமில்லாத தன் தந்தையின் தொழிலுக்கு செல்ல நேரிடுகிறது. இந்திரா காந்தி மறைவிற்கு பின் எழுந்த சீக்கியர்களின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். சோனாலி போஸ் சுழூ சசிகுமாரின் "காயாதரன்' பிகா குமாரின் காமோஸ் பானி போன்ற இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்கள் சீக்கியர் படுகொலை நிகழ்வை வெவ்வெறு கோணங்களில் தங்கள் கதைக்காக எடுத்துக் கொண்டாலும் எந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பை விளக்கும் படமாக அமைந்திருந்தது. வரலாற்றை மையமாக வைத்து போஸ், எலிசபெத் படங்கள் திரையிடப்பட்டன. சியாம் பெனகல் இயக்கிய போஸ் இந்தி படமான சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மறக்கப்பட்ட கதாநாயகனாக சித்தரிக்கிறார். பிரதீப் நாயர் இயக்கியுள்ள "ஓரிடம்' குடும்பச் சூழ்நிலையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண் அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறாள் என்பது தான் திரைக்கதை. 8 விருதுகள் பெற்றிருந்தாலும், வணிக ரீதியில் வெற்றி பெற வில்லை. திரைக்கதையை தைரியமாக இயக்கிய பிரதீப் நாயர் பாராட்டப்படக்கூடிய இயக்குநர். சஞ்சய் லீலா பன்சாலியின் இந்தி திரைப்படமான பிளாக் கண் தெரியாத, காது கேட்காத, வாய் சரிவர பேச இயலாத குழந்தைக்கு பயிற்சி அளிக்கிறார். அமிதாப் அந்த குழந்தைக்காகவே வாழ்நாளை செலவழிக்கிறார். குழந்தை வளர்ந்து பட்டம் பெறும் சமயம் முதுமையால் பாதிக்கப்பட்டு தனது நினைவுகளை இழந்து தவிக்கிறார். நிறைவு நோக்கி படம் நகரும் போது அந்த குழந்தை அவருக்கு பயிற்சி உள்ளது. இது போன்ற குழந்தைகளுக்கு சொல்லித் தருகின்ற போது, வருகின்ற சிக்கல்கள் அவர்களது மனநிலை அவர்களுக்கு ஏற்படும் காதல். அவர்கள் இந்த உலகை விரல்களால் உணரும் உணர்வை சித்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. பேஜ் 3 என்ற இந்திப்படம் பதுர் பந்தார்கா இயக்கியுள்ளார். மேல்தட்டு மக்களாக தங்களை கருதி கொள்ளும் பணக்கார வர்க்கத்தின் மறுமுகத்தை காட்டும் படமாக அமைந்துள்ளது. பத்திரிகை உலகின் நிலையும், பெண் பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் இயக்குநர் எடுத்துரைத்த விதம் சிறப்பாக உள்ளது. ஆண் பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணத்திரைப்படம். படம் தயாரித்த குழுவின் ஆய்வின் படி திருவனந்தபுரத்தில் 500க்கு மேற்பட்ட ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார்கள். இப்படம் இவர்களது வாழ்க்கை முறையும், சோகங்களையும் எடுத்து இயம்பும் படமாக இருந்தது. இதன் இயக்குனர் சைனி ஜேக்கப் பெஞ்சமின். டெவில் ஒர்ஷிப்பர்ஸ் சாத்தானை வழிபடுபவர்களை பற்றிய ஆவணப்படம். திருவனந்தபுரத்தில் சாத்தானை வழிபடுபவர்கள் இருக்கிறார்கள் என்று இந்த ஆவணப்படம் கூறுகிறது. கே.பி. ஷிம்னா இயக்கிய "தி செல்ஸ்' விவாகரத்து தேவையா இல்லையா என்று விவாதம் செய்யும் படமாக உள்ளது. இளம் ஆவண பட இயக்குநர் என்றே கூறலாம். மும்பை இன்டர்நேஷனல் திரைப்படவிழாவில் இவர் இயக்கிய "சர்வைவர்' விருதுகளை பெற்றுள்ளது.
இவ்விழா குறித்து இயக்குனர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அளித்த செவ்வி: கேள்வி: இந்த வருடம் சூர்யா திரைப்பட விழா 75 நாட்கள் தொடர என்ன காரணம்? பதில்: ஆசியாவிலேயே சூர்யா திரைப்பட விழா முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மலையாளத்தில் உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் 51. அதன் அடிப்படையில் ஆரம்பகால சூர்யா திரைப்பட விழா 51 நாட்கள் மட்டும் நடத்த வந்தோம். தற்போது கிழக்கு மேற்கு நாடுகளின் திரைப்படங்களும் இடம் பெறுவதால் 75 நாட்கள் தொடரலாம் எனத் தீர்மானித்தோம். கேள்வி: சூர்யாவின் முக்கியச் சாதனை எனக் கருதுவது? பதில்: சூர்யா ஆரம்பிக்கும் போது திருவனந்தபுரத்தில் 3 நாட்டிய கலைக்கூடம் மட்டுமே இருந்தது. தற்போது 100 நாட்டியக் கலைக்கூடம் உருவாகியுள்ளது. நாட்டியம் மட்டுமின்றி திரைப்படம், இசை ஆகியவற்றிலும் மக்களின் ரசிக்கும் திறன் மேன்மையடைந்துள்ளது. கேள்வி: இம்முறை சூர்யாவின் சிறப்பம்சம் என்ன? பதில்: சிறப்பம்சம் பற்றிக் கூறுமுன் இம்முறை ஒரு குறைபாடு ஏற்பட்டுள்ளது. தாகூர் திரையரங்கம் கிடைக்காததால் கலாபவன் திரையரங்கில் இவ்விழா நடைபெறுகிறது. இதனால் 1500 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி குறைந்து வெறும் 500 பேர் மட்டுமே காணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பம்சமாக குருபூஜை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு மும்பை எஸ்.கமல் என்பவருக்கு குருபூஜை நடத்தப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அவரின் மகளின் அறுவை சிகிச்சைக்கும், அவரின் திருமணத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு குருபூஜை அனந்த லக்ஷ்மி வெங்கட்ராமன் என்பவருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. கேள்வி: தற்போது சூர்யாவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? பதில்: சூர்யா துவங்கப்பட்டு 28 வருடம் ஆகிறது. மொத்தம் 16 நாடுகளில் சாப்டர்கள் (கிளைகள்) உள்ளது. மொத்த உறுப்பினர்கள் 30 ஆயிரம் பேர். கேரளத்தில் மட்டும் 7 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார் அவர்.
""குஷ்புவின் கருத்தை வரவேற்கிறோம்..''
அ.ராமசாமி: (பேராசிரியர் தமிழ்த்துறை)
குஷ்புவின் இக்கருத்தானது ஆர்ப்பாட்டத்திற்குரியது அல்லது. நவீன தமிழ்சமூகத்தின் மாற்றத்தை உள்வாங்கி அவரால் கூறப்பட்டுள்ளது. இது மிகச்சரியான கருத்து ஆகும். இன்றைய நகரத்து, படித்த பெண்கள் கட்டுப்பாட்டு தளத்திலிருந்து மாறி வருகின்றனர். குஷ்புவின் கூற்று இன்று அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. அவரின் கருத்து மீதன்றி வேறு விஷயமாக போராடப்பட்டு வருகிறது. இதே கருத்தை ஒரு நடிகர் கூறியிருந்தால் இந்த அளவு பாதிப்பு இருக்காது. தமிழர்களுக்கு குஷ்புவின் உடல் தேவைப்படுகிறது. ஆனால் அவரின் அறிவு, கருத்து ஏற்க முடியவில்லை. கருத்து கூறியவர் ஊரை விட்டு போக வேண்டுமெனக் கூறுவது, தமிழர்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு எனக்கூறுவது போல் உள்ளது. குஷ்புவின் மீது வெளிமாநிலத்தவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. குஷ்பு விவகாரத்தில் குறிப்பிட்ட சில சேனல்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இச்செய்தியின் பரபரப்பு அடங்காமல் தொடரச் செய்கின்றது. சில அரசியல் கட்சிகள் மக்களின் உணர்வை துõண்டி தங்கள் அரசியல் எல்லையை விரிவு படுத்தப்பார்க்கின்றன என்றார்.
மேலும் குஷ்பு கூறிய கருத்தினை பற்றி கல்லுõரி மாணவர்களிடையே கேட்ட போது:
பென்சிகர் (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை மாணவர்)
வாழ்க்கை என்பது ஒரு தடவைதான். அதை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருந்தாலும் பரவாயில்லை. பெண்களுக்கு தங்கள் வீட்டிலோ அல்லது திருமணம் ஆன பின் கணவன் வீட்டிலோ வேலி என்று ஒன்று போட்டு அவர்களை கட்டுப்படுத்த முடியாது. தனி மனித சுதந்திரம் என்பது பெரிதும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே திருமணத்திற்கு முன்பான அவர்களின் வாழ்க்கை எனது கவனத்திற்கு தேவையற்ற ஒன்றாகும் என்றார். வினோத்: (2ம் ஆண்டு தொடர்பியல் துறை) பெண்கள் தங்கள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலான வாழ்வு எவ்வாறு அமைந்தது என ஆராய்வது தேவையற்ற ஒன்று. திருமணத்திற்கு முன்பான வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பொறுத்தது. திருமணமான பின்பு அமையும் அமைதியான வாழ்க்கையே எனக்கு தேவை என்றார்.
வி.வி.ஆர்.சுப்பிரமணியன்: (2ம் ஆண்டு மின்னணு ஊடகவியல் துறை)
திருமணத்திற்கு முன்பு எனது பார்வையில் குடும்பப்பாங்கான, கட்டுபாட்டிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பூ வைத்தல், சேலை அணிதல் போன்றவையே அவர்களின் அடையாளச் சின்னமாக இருக்க வேண்டும். நவீன மாற்றங்களான ஜீன்ஸ், டிசர்ட்ஸ் ஆடை கலாச்சாரம் போன்றவற்றை என்னால் ஏற்க முடியாது. குஷ்புவின் கருத்து என்னைப் பொறுத்தவரை மறுப்பிற்குரிய ஒன்று. அருண்குமார்: (தொடர்பியல் துறை விரிவுரையாளர்) குஷ்பு விவகாரத்தில் பேச்சுரிமை என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பிரபலமான ஒருவர் கருத்து கூறும் போது அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய ஒன்று. நாம் எந்த நிலையில் இந்த கருத்தை கூறுகிறோம் என்பதை அந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டை புரிந்து கொண்டு தமது கருத்தை வெளியிட வேண்டும். நாம் கூறும் சொந்த கருத்து மக்களிடையே எந்நிலையில் போய் சேரும் என்பதை அறிந்தே வெளிப்படையாக தமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் இவ்விவகாரத்தின் மூலம் அடிப்படை உரிமையான ஒருவரின் கருத்துரிமை பாதிக்கப்படுவதை அறிய முடிகிறது. மாற்றங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தயங்கும் மக்களின் மன உணர்வினை பிரதிபலிக்கும் ஒன்றாகவே உள்ளது.
அ.தேன்மொழி, ரா. பத்மலதா. படங்கள் மா. மாரியப்பன், பா. சேதுராமன், வி.வி. ஆர். சுப்பிரமணியன்.